உலகம்

பிரான்ஸ் தேசிய நூலக நிர்வாகிகளுக்கு அழைப்பு! : அமைச்சர் அன்பின் மகேஸ் பொய்யாமொழி தகவல்!

பிரான்ஸ் தேசிய நூலக நிர்வாகிகளுக்கு அழைப்பு! : அமைச்சர் அன்பின் மகேஸ் பொய்யாமொழி தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில், தமிழ்நாட்டின் கனவு ஆசிரியர் விருது பெற்ற ஆசிரியப் பெருமக்களை அழைத்துக்கொண்டு, அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பிரான்ஸ் நாட்டிற்கு அரசு முறைப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

கடந்த அக்டோபர் 25ஆம் நாள், பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் தலைநகரில் அமைந்துள்ள “புரட்சி சதுக்கம்” என அழைக்கப்பட்ட மிகப்பெரும் பொது சதுக்கத்தை பார்வையிட்ட ஆசிரியர்கள், இன்று (அக்டோபர் 27) பிரான்ஸ் நாட்டில் உள்ள பழமையான தேசிய நூலகத்தை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியுடன் பார்வையிட்டனர்.

பிரான்ஸ் தேசிய நூலக நிர்வாகிகளுக்கு அழைப்பு! : அமைச்சர் அன்பின் மகேஸ் பொய்யாமொழி தகவல்!

இது குறித்து அமைச்சர் அன்பில் மகேஸ், தனது X வலைதள பக்கத்தில், “தமிழ், கிரேக்கம், அரபி போன்ற தொன்மையான மொழிகளின் 5000 ஓலைச்சுவடிகளைக் கொண்டுள்ள இந்நூலகம் நவீன தொழில்நுட்ப வசதிகளையும் கொண்டுள்ளது.

2300க்கும் அதிகமான பணியாளர்களின் உதவியுடன் செயலாற்றும் இந்நூலகம் பிரான்ஸ் நாட்டின் முக்கிய அடையாளமாக பார்க்கப்படுகிறது.

இந்த நூலகத்தின் நிர்வாக அலுவலர்களிடம் தமிழ்நாட்டின் அண்ணா நூற்றாண்டு நூலகம் மற்றும் கலைஞர் நூற்றாண்டு நூலகம் பற்றி எடுத்துரைத்து தமிழ்நாட்டிற்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்தோம்” என பதிவிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories