தமிழ்நாடு

சென்னையில் 9 இடங்களில் ரூ.176 கோடி மதிப்பில் துணை மின் நிலையங்கள்... - மின்சாரத்துறை அறிவிப்பு !

கோடை கால மின் பளுவினை எதிர்கொள்ளும் விதமாக, சென்னை மண்டலத்தில் 9 இடங்களில் 33/11 கி.வோ. துணை மின் நிலையங்கள் ரூ.176 கோடி மதிப்பீட்டில் அமைக்க திட்டம்

சென்னையில் 9 இடங்களில் ரூ.176 கோடி மதிப்பில் துணை மின் நிலையங்கள்... - மின்சாரத்துறை அறிவிப்பு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகக் கலையரங்கத்தில், தமிழ்நாடு மின் பகிர்மானக் கழக சென்னை மற்றும் காஞ்சிபுரம் மண்டல அனைத்து பொறியாளர்களுடன் வடகிழக்கு பருவமழை மற்றும் எதிர்வரும் கோடைகாலத்தில் தடையில்லா மின்சாரம் வழங்குவதற்கான முன்னேற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் நடைப்பெற்றது.

இக்கூட்டத்தில் அ.ரா.மாஸ்கர்னஸ், இயக்குநர், பகிர்மானம் மற்றும் தொடர்புடைய தலைமைப் பொறியாளர்கள், மேற்பார்வைப் பொறியாளர்கள். செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர்கள் மற்றும் உதவி பொறியாளர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த ஆய்வுக்கூட்டத்தில், சென்னை மற்றும் காஞ்சிபுரம் மின் பகிர்மான மண்டலங்களில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட திட்ட முன்னேற்றப் பணிகள் குறித்தும் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்றப் பணிகள் குறித்தும், எதிர்வரும் கோடைகால மின் பளுவை எதிர்கொள்வதற்கு இம்மண்டலங்களில் எடுக்கப்பட்டு வரும் முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்தும் அமைச்சர் விரிவான ஆய்வினை மேற்கொண்டார்.

இந்த ஆய்வின் போது, சென்னை மற்றும் காஞ்சிபுரம் மண்டலங்களில், 30 நிமிடங்களுக்கு மேல் மின் தடங்கல் ஏற்பட்ட நிகழ்வுகள் குறித்து ஒவ்வொரு பிரிவு அலுவலரிடமும் அதற்கான காரணத்தை அந்தந்த அலுவலர்களிம் அமைச்சர் கேட்டறிந்து தொடர்ச்சியாக மின் தடங்கல் ஏற்படும் இடங்களில் சிறப்பு கவனம் செலுத்தி அதற்கான காரணத்தை கண்டறிந்து உடனடியாக சரிசெய்வதற்கு அனைத்து அலுவலர்களுக்கும் உத்தரவிட்டார்.

சென்னையில் 9 இடங்களில் ரூ.176 கோடி மதிப்பில் துணை மின் நிலையங்கள்... - மின்சாரத்துறை அறிவிப்பு !

இந்த ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து அலுவர்களிடமும் நேரடியாக அவர்களுடைய பிரிவு அலுவகத்தில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்தும், மின்னகத்தில் பெறப்பட்ட புகார்கள் குறித்தும் விரிவான ஆய்வினை மேற்கொண்ட அமைச்சர் பொதுமக்களிடமிருந்து புகார்கள் வராவண்ணம் அனைத்து அலுவலர்களும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தினார்.

மழைக்காலங்களின்போது தண்ணீர் தேங்குவதன் பொருட்டு பில்லர் பெட்டிகள் பழுதடைவதை தடுக்கும் பொருட்டு, சென்னை மற்றும் காஞ்சிபுரம் மண்டலங்களில் இதுவரை 6,024 பில்லர் பெட்டிகள் தரை மட்டத்திலிருந்து ஒரு மீட்டர் உயரத்திற்கு உயர்த்தப்பட்டுள்ளன. மேலும், 503 பில்லர் பெட்டிகளை உயர்த்தும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை, இம்மாத இறுதிக்குள் முடித்திடுமாறு அமைச்சர் உத்தரவிட்டார்.

சென்னை மற்றும் காஞ்சிபுரம் மின் பகிர்மான மண்டலங்களில் இதுவரை 5,433 வளைய சுற்றுத்தர அமைப்புகள் (Ring Main Unit) 785 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு பணிகள் முழுவதுமாக நிறைவடைந்துள்ளது. மேலும், சென்னை மண்டலத்தில் கூடுதலாக 310 வளைய சுற்றுத்தர அமைப்புகள் (Ring Main Unit) 51 கோடி ருபாய் செலவில் நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது.

எதிர்வரும் கோடை கால மின் பளுவினை எதிர்கொள்ளும் விதமாக, சென்னை மண்டலத்தில் மாதவரம் ரேடியன்ஸ், மகாகவி பாரதியார் நகர். பருத்திப்பட்டு, சதர்ன் அவென்யூ, சோழவரம், புதுப்பேட்டை, முண்டக்கன்னியம்மன் கோவில், டேவிட்சன் தெரு, கணேஷ் நகர் ஆகிய 9 இடங்களில் 33/11 கி.வோ. துணை மின் நிலையங்கள் ரூ.176 கோடி மதிப்பீட்டில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னையில் 9 இடங்களில் ரூ.176 கோடி மதிப்பில் துணை மின் நிலையங்கள்... - மின்சாரத்துறை அறிவிப்பு !

இதே போன்று, காஞ்சிபுரம் மண்டலத்தில் AAI Staff Quarters, மாங்காடு ஆல்டிஸ், அரசன்கழனி மற்றும் குறிஞ்சி நகர் ஆகிய 4 இடங்களில் 33/11 கி. வோ. துணை மின் நிலையம் 96.20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை மண்டலத்தை பொறுத்தவரை தற்போது துணைமின் நிலையங்களில் இயக்கத்தில் உள்ள 16 மின் மாற்றிகளின் திறனை தரம் உயர்த்திடவும். இதே போன்று, காஞ்சிபுரம் மண்டலத்தில் 5 மின் மாற்றிகளின் திறனை தரம் உயர்த்திடும் பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

பருவமழையின் போதும், எதிர்வரும் கோடை கால மின் பளுவினை கருத்திற்கொண்டு தலைமைப் பொறியாளர்கள், மேற்பார்வைப் பொறியாளர்கள் உள்ளிட்ட அனைவரும் தகுந்த முன்னெச்சரிக்கையுடன் செயல்படுமாறும். தடையில்லா சீரான மின்சாரம் வழங்குவதற்கு தேவையான தளவாட பொருட்கள் மற்றும் உபகரணங்களை கையிருப்பில் வைத்துக் கொள்ளும்மாறும்.

மின் கட்டமைப்பினை சீர் செய்யும் பணிகளில் ஈடுபடும் அனைத்து பணியாளர்களும் உரிய பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்தி பாதுகாப்பான முறையில் பணிகளில் ஈடுபட்டு விரைவாக மின் கட்டமைப்பினைச் சரி செய்யுமாறும் அனைத்து அலுவலர்களுக்கும் அமைச்சர் உத்தரவிட்டார். மின் சேவைகள் மற்றும் மின் தடை குறித்த புகார்களுக்கு 24 மணி நேரமும் செயல்படும் மின்னகத்தை 94987 94987 தொடர்பு கொள்ளுமாறு பொது மக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

banner

Related Stories

Related Stories