இந்தியா

எத்தனை வழக்குகளில் தண்டனை வழங்கப்பட்டுள்ளன? : அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் கேள்வி!

எத்தனை வழக்குகளில் தண்டனை வழங்கப்பட்டுள்ளன? என அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

எத்தனை வழக்குகளில் தண்டனை வழங்கப்பட்டுள்ளன? : அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் கேள்வி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஒன்றியத்தில் பா.ஜ.க அரசு ஆட்சிக்கு வந்த பிறகு தங்களுக்கு எதிரானவர்களை அமலாக்கத்துறை மூலம் மிரட்டி கைது செய்து வருகிறது. முன்னாள் முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால், அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்ட பல எதிர்க்கட்சி தலைவர்களை அமலாக்கத்துறையை கொண்டு பழிவாங்கியது.

அரசியல் கட்சிகள் ஒருபுறம் என்றால் பெரிய நிறுவனங்களையும் அமலாக்கத்துறை மூலம் மிரட்டி தங்கள் கட்சிக்கு நிதியாகவும், பா.ஜ.க பெற்று வருகிறது. அமலாக்கத்துறை வழக்கில் பல முறை உச்சநீதிமன்றம் கடுமையான தனது கண்டனங்களை பதிவு செய்துள்ளது.

இந்நிலையில், எத்தனை வழக்குகளில் தண்டனை வழங்கப்பட்டுள்ளன? என அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. ஜாமீன் கோரி வழக்கு ஒன்று உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், ”மனுதாரர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டுள்ளார். ஒரு ஆண்டு, 9 மாதங்கள் அவர் சிறையில் இருந்துள்ளார். இன்றுவரை அவர் மீதான குற்றச்சாட்டு நீதிமன்றத்தில் பதிவு செய்யப்படவில்லை. வழக்கின் விசாரணையை தொடங்குவதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை” என அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

மேலும், பணப்பரிவர்த்தனை வழக்குகளில் எத்தனை வழக்குகள் முடிவடைந்துள்ளன? எத்தனை வழக்குகளில் தண்டனை வழங்கப்பட்டுள்ளன என்பதை அமலாக்கத்துறை ஒருநாள் கண்டறிய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் விமர்சித்துள்ளது.

banner

Related Stories

Related Stories