இந்தியா

டெல்லி காற்று மாசு: “அதிகரிக்கும் வரை என்ன செஞ்சுட்டு இருந்தீங்க?” -ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி

டெல்லி காற்று மாசு: “அதிகரிக்கும் வரை என்ன செஞ்சுட்டு இருந்தீங்க?” -ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

டெல்லியில் ஆண்டுதோறும் காற்று மாசு அதிகரித்து வருகிறது. இதற்கு டெல்லி அரசு பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்தாலும், மக்கள் பலரது வாகன போக்குவரத்து காரணமாகவே காற்று மாசு அதிகரித்து வருகிறது. அதிலும் அண்மைக்காலமாக இந்த பிரச்னை அதிகரித்து வரும் நிலையில், அங்கு வசிக்கும் பொதுமக்கள் மிகவும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

இதன்காரணமாக நடந்து முடிந்த தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசு விற்கவோ, வெடிக்கவோ கூடாது என்று தடை விதித்தது டெல்லி அரசு. குறிப்பாக பட்டாசு தயாரிக்கவோ, விற்கவோ, வெடிக்கவோ கூடாது என்று வரும் ஜனவரி 1, 2025 வரை தடை விதித்துள்ளது டெல்லி மாசு கட்டுப்பாட்டு வாரியம். மேலும் உத்தரவை மீறி பட்டாசு வெடிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

டெல்லி காற்று மாசு: “அதிகரிக்கும் வரை என்ன செஞ்சுட்டு இருந்தீங்க?” -ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி

இந்த சூழலில் இந்த வழக்கு கடந்த நவ.12-ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, மாசு இல்லாத சூழலில் வாழ்வதற்கான உரிமை அடிப்படை உரிமை என்றும், எந்தவொரு மதமும் மாசுவை உருவாக்கும் எந்த செயலையும் ஊக்குவிப்பதில்லை என்றும் தெரிவித்தது.

தொடர்ந்து டெல்லியில் காற்று மாசு என்பது ஆண்டு முழுவதும் பெரிய பிரச்னையாக இருக்கும்போது, குறிப்பிட்ட மாதங்களுக்கு மட்டும் ஏன் தடை விதிக்கப்படுகிறது? என்று கேள்வியும் எழுப்பியது. மேலும் பட்டாசு வெடிக்க நிரந்தர தடை விதிப்பது குறித்துப் பரிசீலிக்க வேண்டும் என்று டெல்லி போலீஸ் வரும் நவ.25-ம் தேதிக்குள் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

டெல்லி காற்று மாசு: “அதிகரிக்கும் வரை என்ன செஞ்சுட்டு இருந்தீங்க?” -ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி

இந்த நிலையில், தலைநககர் டெல்லியின் பாவனா, அசோக் விகார் ஆகிய இடங்களில் காற்று மாசு 495 புளள்ளிகளாகவும், டெல்லி விமான நிலையத்தில் 494 புள்ளிகளாகவும் பதிவாகியுள்ள நிலையில், இதுகுறித்த வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது விசாரித்த உச்சநீதிமன்றம், ஒன்றிய அரசுக்கு கண்டனம் தெரிவித்தது.

அதாவது, இந்த வழக்கு விசாரணையின்போது, நீதிபதியிடம் ஒன்றிய அரசு வழக்கறிஞர், “கடந்த 3, 4 நாட்களாக காற்று மாசு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. காற்று மாசு 300 முதல் 400 வரை இருக்கும் போது 3-வது நிலை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது” என்றார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “கட்டுப்பாடுகளை விதிக்க மூன்று நாட்கள் தாமதம் ஏன்?” என்று கேள்வி எழுப்பினர்.

டெல்லி காற்று மாசு: “அதிகரிக்கும் வரை என்ன செஞ்சுட்டு இருந்தீங்க?” -ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி

மேலும் “டெல்லியில் காற்று மாசுபாடு 400 புள்ளிகள் தாண்டுவது வரை கட்டுப்பாடுகளை விதிக்காமல் ஒன்றிய அரசு காத்திருந்தது ஏன்?” என்றும் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு ஒன்றிய அரசு வழக்கறிஞர், “சில நாட்களில் நிலமை சீராகும், காற்று வீசும் வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததால் கட்டுப்பாடுகள் விதிப்பது தாமதமானது” என்று ஏற்கும்படியில்லாத விளக்கம் கொடுத்தார்.

அதற்கு நீதிபதிகள், “இது போன்ற தீவிரமான சூழ்நிலையில் வானிலை ஆய்வு மையத்தின் கருத்தை யாராது நம்பி காத்திருக்க முடியுமா?” என்று இலகுவான தொனியில் கேள்வி எழுப்பினர். தொடர்ந்து சில மணி நேரங்களுக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், பொதுமக்கள் சுகாதாரமான நிலையில் வாழ ஏதுவாக நடவடிக்கைகளை தீவிரபடுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார் நீதிபதி.

டெல்லி காற்று மாசு: “அதிகரிக்கும் வரை என்ன செஞ்சுட்டு இருந்தீங்க?” -ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி

இதுகுறித்து நீதிமன்றம் தெரிவித்தது வருமாறு :

காற்று மாசை தடுக்க நிலை 3, 4 கட்டுப்பாடுகளை மிக தாமதமாக அமல்படுத்தியற்கு உச்ச நீதிமன்றம் கண்டனம். இது தவறான அணுகுமுறை என்று நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் முறையாக செயல்படுத்தப்படுகிறதா என்பதை டெல்லி உள்ளிட்ட NCR மாநிலங்கள் கண்காணிக்க வேண்டும்.

காற்று மாசு கூடுதல் மோசமடையாமல் தடுக்க ஒன்றிய அரசு NCR மாநில அரசுகளுடன் ஆலோசனை நடத்த வேண்டும். எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு. விவசாய கழிவுகள் எரிப்பது குறித்த அக்டோபர் 1-ம் தேதி முதலான செயற்கை கோள் தரவுகளை தாக்கல் செய்ய உத்தரவு.

பொதுமக்கள் சுகாதாரமான நிலையில் வாழ ஏதுவாக நடவடிக்கைகளை தீவிரபடுத்த வேண்டும் என்று உத்தரவு. 10, 12 உள்ளிட்ட அனைத்து வகுப்புகளுக்கும் ஆன்லைன் வகுப்புகள் நடத்த உச்சநீதிமன்ற நடவடிக்கைகள் எடுக்க உத்தரவு.

banner

Related Stories

Related Stories