தமிழ்நாடு

சில்வர் பேப்பர், பிளாஸ்டிக் கவரில் உணவை பார்சல் செய்தால் கடைக்கு சீல்: உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை !

சில்வர் பேப்பர், பிளாஸ்டிக் கவரில் உணவை பார்சல் செய்தால் கடைக்கு சீல்: உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

உணவகம் ஒன்றில் பிரியாணி உணவை சில்வர் கவரில் பார்சல் செய்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. அந்த வீடியோவில் சம்பந்தப்பட்ட நபர் ஒருவர் பிரியாணி கடைக்கு சென்று உணவு பார்சல் செய்து வந்து அந்த உணவை திறந்து சாப்பிடும் போது சில்வர் கவரை வைத்து உணவு பொட்டலம் கட்டியதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இது குறித்து உணவு பாதுகாப்பு துறையின் கவனத்துக்கு வந்த நிலையில், வீடியோ தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இந்த சம்பவம் எங்கு நடைபெற்றாலும் உடனடியாக உணவு பாதுகாப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது

ஏற்கனவே உணவு பாதுகாப்புத்துறை சட்டத்தின் படி பார்சல் வாங்கி செல்லும் உணவுகள் பிளாஸ்டிக் மற்றும் சில்வர் கவரில் பயன்படுத்தி பார்சலை வழங்க வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சில்வர் பேப்பர், பிளாஸ்டிக் கவரில் உணவை பார்சல் செய்தால் கடைக்கு சீல்: உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை !

இதனிடையே மீண்டும் இது போன்ற சில்வர் கவர் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தி உணவு வகைகளை பார்சல் செய்தாலோ அல்லது விற்பனை செய்தாலோ அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்பு துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், கடையின் உரிமையாளர் மீது 5000 ரூபாய் அபராதம் விதித்து உணவு பாதுகாப்புத்துறை சட்டத்தின் படி அவரது கடை உரிமைத்தை ரத்து செய்து சீல் வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு இதனை உணவகங்கள் முறையாக பின்பற்றவேண்டும் என்றும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories