தமிழ்நாடு

தமிழ்நாட்டின் 234 தொகுதிகளிலும் ”கலைஞர் நூலகம்” திறக்கப்படும்! : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதி!

தமிழ்நாட்டின் 234 தொகுதிகளிலும் ”கலைஞர் நூலகம்” திறக்கப்படும்! : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, தி.மு.க இளைஞரணி சார்பில், என் உயிரினும் மேலான கலைஞர் எனத் தலைப்பிட்ட பேச்சுப் போட்டி மாநில அளவில் நடைபெற்று முடிந்து, அதற்கான பரிசு வழங்கும் நிகழ்ச்சி சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரையாற்றினர். பேச்சுப் போட்டியில், முதல் மூன்று பரிசுகளை வென்ற மோக நிதி, சிவரஞ்சனி மற்றும் விஷ்வா ஆகியோருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிசு வழங்கினார்.

இதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “தமிழ்நாட்டளவில், பேச்சுப்போட்டி அறிவிக்கப்பட்டபோது, சுமார் 17,000 ஆயிரம் தங்களது விருப்பங்களை தெரிவித்து, முதற்கட்ட போட்டியில் கலந்து கொண்டனர்.

அதிலிருந்து 913 நபர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு பயிற்சி கொடுத்து அடுத்த கட்ட போட்டி நடத்தினோம். இதில் 182 பேர் அடுத்தக்கட்ட போட்டிக்கு தேர்வாகினர்.

தமிழ்நாட்டின் 234 தொகுதிகளிலும் ”கலைஞர் நூலகம்” திறக்கப்படும்! : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதி!

இதனையடுத்து, அவர்களை இரண்டு குழுக்களாக பிரித்து, சென்னையில் இறுதிகட்ட போட்டி நடைபெற்றது. இந்நிலையில், இன்று (27.10.24) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால், பேச்சுப்போட்டியில் வென்ற முதல் மூன்று போட்டியாளர்களுக்கு பரிசுத்தொகையும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

அடுத்த ஆண்டும், இது போன்ற பேச்சுப்போட்டி நடத்தப்பட வேண்டும் என்ற முதலமைச்சரின் அறிவுறுத்தலின் படி, அடுத்த ஆண்டும், பிரம்மாண்டமான பேச்சுப்போட்டி நடத்தப்படும்.

மேலும், தமிழ்நாட்டின் 75 தொகுதிகளில் கலைஞர் நூலகம் திறக்கப்பட்டுவிட்டது. இதன் வழி, மாணவர்களும், இளைஞர்களும் பயனடைந்து வருகின்றனர். அடுத்த 3 மாதங்களில் 234 தொகுதிகளிலும் கலைஞர் நூலகம் திறக்கப்படும்” என்றார்.

banner

Related Stories

Related Stories