வைரல்

வளர்ந்து வரும் சேனல்களை குறி வைக்கும் யூடியூப்பின் புதிய விதிமுறைகள்!

யூடியூப் நிர்வாகத்தின் புதிய விதிமுறைகளால் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர் சேனல் உரிமையாளர்கள்.

வளர்ந்து வரும்  சேனல்களை குறி வைக்கும் யூடியூப்பின் புதிய விதிமுறைகள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சமூக வலைதளங்களின் ஆதிக்கம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பரிமாணத்தில் அதிகரித்துக்கொண்டே இருந்தாலும் அதற்கான பிரைவசி கட்டுப்பாடுகளும் அவ்வப்போது கொடுக்கப்பட்டே வருகிறது.

அந்த வகையில், வீடியோ தளமான யூடியூப்பில் சேனல்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே போகிறது. சிலர், ஜிமெயில் கணக்கு வைத்திருப்பவர்களும் பொழுதுபோக்குக்காக சேனலை கிரியேட் செய்து அதனை பயன்படுத்தி வருகின்றனர்.

வளர்ந்து வரும்  சேனல்களை குறி வைக்கும் யூடியூப்பின் புதிய விதிமுறைகள்!

அதே நேரம், பார்வையாளர்களை பெறாத சில யூடியூப் சேனல்களும் உள்ளதால் புதிய விதிமுறையை கொண்டுவந்துள்ளது யூடியூப் நிர்வாகம்.

அதுஎன்னவெனில், யூடியூப் தளத்தில் உள்ள சேனல்கள் போதிய அளவு சம்பாதிக்கவில்லை என்றால் அந்த சேனல்களை நீக்குவதாக புதிய விதிமுறை கொண்டுவரப்பட்டுள்ளது.

வருமானம் ஈட்டாத, வெற்றி பெறாத யூடியூப் சேனல்கள் நீக்குவது மட்டுமல்லாமல், அந்த சேனல்களில் உள்ள அத்தனை வீடியோக்களும் யூடியூப்பில் இருந்து நீக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது உலகம் முழுக்க உள்ள யூடியூப்பர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இளைஞர்கள், தொழில் முனைவோர்கள் பலர் சமூக வலைதளங்கள் மூலம் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். அதில் யூடியூப்பும் பெரும் அங்கம் வகிக்கிறது.

வளர்ந்து வரும்  சேனல்களை குறி வைக்கும் யூடியூப்பின் புதிய விதிமுறைகள்!

வளர்ந்து வரும் யூடியூப் சேனல்களை குறிவைத்து பலியாக்கி ஏற்கெனவே வளர்ந்து பிரபலமடைந்த சேனல்களை மேலும் மேலும் வளர்க்க யூடியூப் உதவுகிறதா எனவும் சர்வதேச அளவில் யூடியூப் நிர்வாகம் மீது பலரும் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

இந்த புதிய விதிமுறைகளை வருகிற டிசம்பர் 10ம் தேதி முதலே நடைமுறைப்படுத்தப்படும் என யூடியூப் சேனல்களுக்கு அந்நிர்வாகம் மெயில் மூலம் தெரிவித்து வருகிறது.

banner

Related Stories

Related Stories