இஸ்ரேலைச் சேர்ந்த NSO என்ற சைபர் செக்யூரிட்டி நிறுவனம் ஒன்று இந்தியர்கள் பலரின் வாட்ஸ் அப் மூலம், ஸ்பைவேர்களை செலுத்தியுள்ளதாக வாட்ஸ் அப் நிறுவனம் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது.
இந்த ஸ்பைவேரின் மூலம் இந்திய பத்திரிகையாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், வழக்கறிஞர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் ஆகியோரே கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் எனவும் தெரிவித்துள்ளது.
இந்த ஸ்பைவேர் வாய்ஸ் கால் மற்றும் வீடியோ கால் மூலம் ஊடுருவுவதாகவும், அந்த அழைப்புகளை பொருட்படுத்தாவிட்டாலும், அதனை அட்டெண்ட் செய்தாலும் எளிதாக ஸ்மார்ட் ஃபோன்களில் ஸ்பைவேர் ஊடுருவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகையால் இதனை தடுப்பதற்கு ஒரே வழியாக வாட்ஸ் அப்பின் லேட்டஸ்ட் வெர்ஷனை அப்டேட் செய்வதுதான்.
ஏனெனில் அப்டேட் செய்யாமல் இருக்கும் வாட்ஸ் அப்களில் பாதுகாப்பு வசதிகள் குறைவாக உள்ளதால் எளிதில் ஹேக் செய்துவிடமுடியும்.
அதன் மூலம் குறிப்பிட்ட சாஃப்ட் வேரை இன்ஸ்டால் செய்து தரவுகளை திருட முடியும். இந்த செயல்கள் எதுவும் பயனாளர்களுக்கு தெரியாமெலேயே நடைபெறும்.
இது வாட்ஸ் அப்க்கு மட்டுமல்லாமல் மற்ற சமூகவலைதள செயலிகளுக்கும் பொருந்தும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.