தமிழ்நாடு

கடற்கரை - தாம்பரம் இடையே இயக்கப்படும் 28 மின்சார ரயில்கள் இன்று ரத்து! : கூடுதல் பேருந்துகள் இயக்கம்!

பயணிகளின் எண்ணிக்கை இவ்வழித்தடங்களில் அதிகரிப்பதை பொறுத்து கூடுதல் பேருந்துகளை இயக்க திட்டம்.

கடற்கரை - தாம்பரம் இடையே இயக்கப்படும் 28 மின்சார ரயில்கள் இன்று ரத்து! : கூடுதல் பேருந்துகள் இயக்கம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு, திருமால்பூர், காஞ்சிபுரம், அரக்கோணம் செல்லும் மின்சார ரயில்களின் நேர அட்டவணையில் மாற்றம் செய்துள்ளதாக தென்னக ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

மேற்கண்ட இடங்களில் இருந்து கடற்கரைக்கு வரும் ரயில்களின் நேரமும் மாற்றப்பட்டுள்ளது. புதிய நேர அட்டவணை இன்று (நவ. 22) முதல் அமலுக்கு வருகிறது எனவும், 28 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்படுள்ளது.

ரத்து செய்யப்படும் ரயில்கள் - கடற்கரை- தாம்பரம்; தாம்பரம் - கடற்கரை

ரயில் புறப்படும் நேரம்

காலை 6.52 - காலை 5.12

காலை 7.33 - காலை 6.03

காலை 8.43 - காலை 7.17

காலை 9.40 - காலை 8.19

காலை 11.41 - காலை 9

காலை 11.30 - காலை 9.40

பகல் 12.30 - காலை 10.40

பகல் 12.50 - காலை 11.30

கடற்கரை - தாம்பரம் இடையே இயக்கப்படும் 28 மின்சார ரயில்கள் இன்று ரத்து! : கூடுதல் பேருந்துகள் இயக்கம்!

பிற்பகல் 3.15 - காலை 11.40

மாலை 4.25 - பகல் 1.40

மாலை 5.43 - பிற்பகல் 2.57

மாலை 6.35 - மாலை 4.15

இரவு 7.57 - மாலை 5.10

இரவு 8.25 - மாலை 6.26

இதனால், மாநகர போக்குவரத்துக் கழகம் வழக்கம்போல் பிராட்வே இருந்து தாம்பரம் வழியாக இயக்கப்படும் பேருந்துகளுடன், கூடுதலாக 10 பேருந்துகளை பிராட்வே முதல் தாம்பரத்திற்கும், தாம்பரம் முதல் செங்கல்பட்டு வரை வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக 10 பேருந்துகளை தாம்பரம் முதல் செங்கல்பட்டுக்கும் ஆக மொத்தம் கூடுதலாக 20 பேருந்துகள் பயணிகள் நலன் கருதி இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் பயணிகளின் எண்ணிக்கை இவ்வழித்தடங்களில் அதிகரிப்பதை பொறுத்து கூடுதல் பேருந்துகளை இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories