தமிழ்நாட்டின் கடற்கரை பகுதிகளில் ஆமைகளை பாதுகாக்கும் பொருட்டு ஆமை பாதுகாவலர்களை ஈடுபடுத்த அனுமதி அளித்து ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின்போது தமிழகத்தில் உள்ள கடல் ஆமைகள், ஆமை பாதுகாவலர்களை ஈடுபடுத்தி பாதுகாக்கப்படும் என அப்போதைய வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் அறிவிப்பு வெளியிட்டார்.
இதனை செயல்படுத்தும் வகையில் தற்போது ஆமை பாதுகாவலர்களை ஈடுபடுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்த ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் கடற்கரைக்கு ஆண்டுதோறும் ஆலிவ் ரிட்லி (சிற்றாமைகள்) மற்றும் பச்சை ஆமைகள் வருகை தருகின்றன.
ஆமைகளை பாதுகாக்கும் நோக்கில் உள்ளூர் மீனவ தன்னார்வலர்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்களை உள்ளடக்கிய ஆமை பாதுகாவலர் குழுக்கள் ஆமைகள் முட்டையிடும் பகுதிகளை பாதுகாப்பதற்கும், ஆமை குஞ்சுகளை மீண்டும் கடலுக்குள் பாதுகாப்பாக அனுப்ப உதவும் பணிகளிலும் ஈடுபடுத்தப்படும் எனவும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.