இந்தியா

வட்டி கொடுக்க முடியாமல் தவிப்பு... பெற்ற குழந்தையை விற்க முயன்ற பெற்றோர் - பீகாரில் அதிர்ச்சி !

வட்டி கொடுக்க முடியாமல் தவிப்பு... பெற்ற குழந்தையை விற்க முயன்ற பெற்றோர் - பீகாரில் அதிர்ச்சி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

பீகாரில் நிதிஷ் குமார் தலைமையிலான பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு பெண்களுக்கு எதிரான குற்றங்கள், தலித்கள், சிறுபான்மையினர் மீதான வன்முறைகள், ஏழைகள் மீதான அடக்குமுறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தற்போது பெண் ஒருவர், கடன் தவணை தொகைக்காக தனது ஒன்றரை வயது மகனை விற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகாரின் அராரியா பகுதியில் உள்ள பச்சிரா என்ற பச்சிரா முகமது ஹாரூன் - ரெஹானா கட்டூன் என்ற தம்பதி வசித்து வருகின்ற்னர். இவர்களுக்கு 5 மகன்கள், 3 மகள்கள் என்று 8 பிள்ளைகள் இருக்கும் நிலையில், நிதி நெருக்கடி காரணமாக, தனியார் நிதி நிறுவனத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ரூ.50,000 கடனாக பெற்றுள்ளனர்.

வட்டி கொடுக்க முடியாமல் தவிப்பு... பெற்ற குழந்தையை விற்க முயன்ற பெற்றோர் - பீகாரில் அதிர்ச்சி !

இந்த சூழலில் இந்தக் கடனின் தவணை கட்ட முடியாமல் நாளை இழுத்தடித்து வந்ததால், நிதி நிறுவன ஊழியர்கள் வீடு தேடி வந்து மிரட்டி, அசிங்கமாக திட்டியதாக கூறப்படுகிறது. மேலும் இதுகுறித்து போலீசில் புகார் அளித்து விடுவதாக அவர்கள் மிரட்டியதால் வேறு வழியின்றி, தனது சகோதரன் தன்வீர் பேச்சைக்கேட்டு தனது ஒன்றரை வயது ஆண் குழந்தையை விற்க முடிவெடுத்துள்ளார் தாய் ரெஹானா.

அதன்படி அதே பகுதியை சேர்ந்த ஆரிஃப் என்பவரிடம் இந்த குழந்தையை ரூ.45,000 பணத்திற்கு விற்று, அதில் வெறும் ரூ.9,000 பணத்தை மட்டுமே தனது சகோதரி ரெஹானாவிடம் கொடுத்துள்ளார் தன்வீர். பின்னர் இதுகுறித்து போலீசுக்கு தகவல் கிடைத்ததாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கு பயந்துபோய், தனது குழந்தையை வீட்டுக்கு அழைத்து வர தாய் ரெஹானா சென்றுள்ளார்.

வட்டி கொடுக்க முடியாமல் தவிப்பு... பெற்ற குழந்தையை விற்க முயன்ற பெற்றோர் - பீகாரில் அதிர்ச்சி !

அப்போது தன்னிடம் கொடுத்த ரூ.9,000 பணத்தை ஆரிஃபிடம் கொடுத்து, தனது குழந்தையை திரும்ப கொடுக்கும்படி கூறியுள்ளார். ஆனால், தான் ரூ.45,000 பணம் கொடுத்ததாக கூறி அந்த குழந்தையை கொடுக்க மறுத்துள்ளார் ஆரிஃப். இதைத்தொடர்ந்து இதுகுறித்து போலீசுக்கு தகவல் கிடைக்கவே, ஆரிஃபிடம் இருந்து குழந்தையை மீட்டு குழந்தைகள் நலக்காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

தொடர்ந்து விசாரிக்கையில் ரெஹானாவின் குழந்தையை பெங்களுருவில் இருக்கும் ஒருவருக்கு ரூ.2 லட்சத்துக்கு ஆரிஃப் விற்க தயாராக இருந்தது தெரியவந்தது. குழந்தையின் பெற்றோர் முகமது ஹாரூன் மற்றும் ரெஹானா கட்டூன் இருவரும் போலீஸ் காவலில் உள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories