உலகம்

ஸ்பெயின் அரசர், அரசி மீது சேற்றை வீசிய பொதுமக்கள் : வீடியோ வெளியாகி அதிர்ச்சி... பின்னணி என்ன ?

ஸ்பெயின் அரசர் மற்றும் அரசி மீது போராட்டக்காரர்கள் சேற்றை வீசி எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஸ்பெயின் அரசர், அரசி மீது சேற்றை வீசிய பொதுமக்கள் : வீடியோ வெளியாகி அதிர்ச்சி... பின்னணி என்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

ஸ்பெயினில் கிழக்கு பகுதியில் உள்ள வாலென்சியா உள்ளிய பகுதியில் அக்டோபர் 30 அன்று வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட வெள்ளத்தில் பலர் அடித்துச்செல்லப்பட்ட நிலயில், 200 மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக வெளியானது.

குறைவான நேரத்தில் திடீரென அதீத அளவு மழை பெய்த நிலையில், அதனால் ஏற்பட்ட வெள்ளத்தில் கார்களும், பாலங்களும் அடித்துச்செல்லப்பட்ட காட்சிகள் வெளியாகி உலகையே அதிக வைத்தது. பருவநிலை மாற்றம் காரணமாக இந்த திடீர் கனமழை பெய்ததாக கூறப்படுகிறது.

கடந்த 1973ஆம் ஆண்டு ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் 150 பேர் உயிரிழந்தனர். அதன் பிறகு ஏற்பட்ட மிக மோசமான வெள்ள பாதிப்பாக இது பதிவாகியுள்ளது. மேலும் இந்த வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களுக்காக 3 நாட்களுக்கு தேசிய அளவில் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் ஸ்பெயின் அரசாங்கம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியைப் பார்வையிடச் சென்ற ஸ்பெயின் அரசர் மற்றும் அரசி மீது போராட்டக்காரர்கள் சேற்றை வீசி எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. வெள்ளத்தால் பெரிதும் பாதிப்புக்குள்ளான வாலென்சியா பகுதிக்கு ஸ்பெயின் அரசர் பிலிப் மற்றும் அவரது மனைவி லெட்டிசியா ஆகியோர் சென்றனர்.

அப்போது அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் முழக்கங்களை எழுப்பினர். எனினும் தொடர்ந்து அவர்கள் பொதுமக்களை சந்திக்க சென்ற நிலையில், அரசர் மற்றும் அரசி மீது போராட்டக்காரர்கள் சேற்றை வீசி எதிர்ப்பு தெரிவித்தனர். இதில் அரசர் மற்றும் அரசியின் உடைகள் சேரானது. வெள்ளம் குறித்து முறையான எச்சரிக்கை விடுக்கவில்லை என்றும் நிவாரண பணிகளில் அரசு முறையாக ஈடுபடவில்லை என்றும் கூறி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories