தமிழ்நாடு

"எஸ்.பி. பாலசுப்பிரமணியம் சாலை” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அறிவிப்புக்கு இசைஞானி இளையராஜா நன்றி !

"எஸ்.பி. பாலசுப்பிரமணியம் சாலை” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அறிவிப்புக்கு இசைஞானி இளையராஜா நன்றி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் நினைவைப் போற்றும் வகையில் காம்தார் நகர் முதல் தெருவிற்கு "எஸ்.பி. பாலசுப்பிரமணியம் சாலை” எனப் பெயர் சூட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அறிவிப்புக்கு இசைஞானி இளையராஜா நன்றி தெரிவித்துள்ளார்.

இந்திய திரை உலகின் நீங்கா குரலாக விளங்கிய திரை இசைப் பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் நினைவைப் போற்றும் வகையில் அவர் வாழ்ந்த இல்லம் அமைந்துள்ள நுங்கம்பாக்கம், காம்தார் நகர் முதல் தெருவிற்கு "எஸ்.பி. பாலசுப்பிரமணியம் சாலை” எனப் பெயர் சூட்டப்படுவதாக நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.அறிவித்தார்.

இது குறித்து, முதலமைச்சர் வெளியிட்ட அறிக்கையில், “பல்வேறு மொழிகளில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி, தன்னுடைய அமுதக் குரலால் தமிழ் மக்களின் நெஞ்சங்களில் அரை நூற்றாண்டுக்கும் மேலாக இசை மழை பொழிந்ததோடு, பல படங்களுக்கு இசையமைத்தும், திரைப்படங்களில் நடித்தும், பல்துறை வித்தகராக விளங்கியவருமாக திகழ்ந்தவர்.

"எஸ்.பி. பாலசுப்பிரமணியம் சாலை” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அறிவிப்புக்கு இசைஞானி இளையராஜா நன்றி !

மேலும், ஒன்றிய அரசின் பத்மஸ்ரீ, பத்மவிபூஷன் விருதுகள் பெற்றவரும், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் அன்பிற்குரியவருமான எஸ்.பி.பாலசுப்பிரமணியம், கடந்த 25-9-2020 அன்று இதே நாளன்று நம்மை விட்டுப் பிரிந்தார்.காலம் அவரைப் பிரித்தாலும், நம் அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பெற்றவர் அவர். அன்னார் தமிழ்த் திரையுலகிற்கு ஆற்றிய சேவையைப் போற்றும் வகையிலும், அவரின் புகழுக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையிலும், அவர் வாழ்ந்த இல்லம் அமைந்துள்ள நுங்கம்பாக்கம் காம்தார் நகர் முதல் தெருவிற்கு, “எஸ்.பி. பாலசுப்பிரமணியம் சாலை” எனப் பெயரிடப்படும்” என பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் இந்த அறிவிப்புக்கு இசைஞானி இளையராஜா நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து இளையராஜா வெளியிட்டுள்ள சமூகவலைத்தள பதிவில், “ என் நண்பன் பாலுவின் நினைவாக, அவன் வாழ்ந்த இல்லம் அமைந்துள்ள சாலைக்கு எஸ். பி. பாலசுப்பிரமணியம் சாலை என்று பெயரை மாற்றி வைத்ததற்காக, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு, தமிழக மக்களின் சார்பிலும், திரையுலகத்தின் சார்பிலும், நன்றியை தெரிவித்து கொள்கிறேன்” என்று அதில் கூறப்பட்டுள்ளது

banner

Related Stories

Related Stories