அரசியல்

”மணிப்பூர் மக்களின் உயிர்களை பாதுகாக்க வேண்டும்” : குடியரசு தலைவருக்கு மல்லிகார்ஜுன கார்கே கடிதம்!

மணிப்பூர் வன்முறை குறித்து குடியரசு தலைவருக்கு மல்லிகார்ஜுன கார்கே கடிதம் எழுதியுள்ளார்.

”மணிப்பூர் மக்களின் உயிர்களை பாதுகாக்க வேண்டும்” : குடியரசு தலைவருக்கு மல்லிகார்ஜுன கார்கே கடிதம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

மணிப்பூர் மாநிலத்தில் இரு சமூகத்திற்கு இடையே கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக மோதல்போக்கு இருந்து வருகிறது. இதனால் மாநிலம் முழுவதும் வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளது.

நூற்றுக்கணக்கான பெண்கள் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டும், அப்பாவி குழந்தைகள் நடுத்தெருவிற்கு வந்தும், ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வீடின்றி முகாம்களில் வாழ்க்கை நடத்தும் நிலை இன்று வரை தொடர்கிறது.

தற்போது மீண்டும் இம்மாநிலத்தில் வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளது. மேலும் உரிமை குரல் கேட்டு போராடி வரும் மக்களின் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி, அடக்குமுறையின் உச்சபச்ச செயல்பாடுகளை முடுக்கிவிட்டுள்ளது மாநில பா.ஜ.க அரசு. இதனால் போராட்டத்தில் ஈடுபட்ட ஒருவர் உயிரழக்க நேரிட்டுள்ளது.

பல்வேறு வன்முறை சம்பவங்கள் காரணமாக 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வன்முறை அதிகரித்துள்ளதால் மாநிலத்தின் பல மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது.

வன்முறையை வளர்த்து, வேடிக்கை பார்க்கும் பா.ஜ.க.விற்கு தேசிய அளவில் கண்டனங்கள் எழுகின்ற போதும், முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்களின் வீடுகள் முற்றுகையிடப்படும் போதும், பா.ஜ.க ஆட்சி மீது கடுமையான அதிருப்தி எழும் நிலையிலும், பா.ஜ.க அரசின் செயல்பாடுகளில் மட்டும் மாற்றம் நிகழாத சூழலே நிலவி வருகிறது.

இந்நிலையில், மணிப்பூர் மக்களின் உயிர்களை பாதுகாக்க வேண்டும் என குடியரசு தலைவர் திரவுபதி முர்முக்கு, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடிதம் எழுதியுள்ளார். அதில், ”2023 மே மாதத்தில் இருந்து மணிப்பூரில் வன்முறை சம்பவங்கள் நடந்து வருகிறது. ஆனால் ஒருமுறை கூட பிரதமர் மோடி அம்மாநிலத்திற்கு செல்லவில்லை. கடந்த 18 மாதங்களில் 3 முறை எதிர்க்கட்சி தலைவர்கள் மணிப்பூர் சென்றுள்ளனர்.

ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் செயலற்ற தன்மையால் மக்களின் அடிப்படை உரிமைகள் அழிக்கப்பட்டு வருகிறது. எனவே அரசியலமைப்புச் சட்ட உரிமையை நிலைநிறுத்தி உடனடியாக மணிப்பூர் வன்முறை சம்பவத்தில் தலையிட்டு மக்களின் உயிர் மற்றும் உடைமைகளை பாதுகாக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories