அரசியல்

"பாஜக ஆட்சியில் இந்தி திணிப்பு தொடர்ந்து வருவது கண்டிக்கத்தக்கது" - திருமாவளவன் விமர்சனம் !

LIC வலைதளத்தை முழுமையாக இந்திக்கு மாற்றம் செய்திருப்பது கண்டிக்கத்தக்கது என விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

"பாஜக ஆட்சியில் இந்தி திணிப்பு தொடர்ந்து வருவது கண்டிக்கத்தக்கது" - திருமாவளவன் விமர்சனம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

பல்வேறு துறைகளில் ஒன்றிய பாஜக அரசு இந்தியை திணித்து வரும் நிலையில், பொது நிறுவனமான LIC-இலும் இந்தி திணிப்பை பாஜக முன்னெடுத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தயுள்ளது . அரசின் LIC இணையதளப் பக்கத்தின் முதன்மை மொழி, ஆங்கிலத்தில் இருந்து வந்த நிலையில், தற்போது முகப்பு பக்கத்தில் இந்தி மொழி மட்டுமே இருக்கும் வகையில் மாற்றப்பட்டுள்ளது.

அதிலும், மொழி மாற்றும் பிரிவில் ஆங்கிலத்தை தேர்வு செய்தால் மட்டுமே, ஆங்கிலத்தில் இணையதளத்தை பார்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தி பேசாத மக்கள் LIC இணையதளத்தை கையாள இயலாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில்,LIC வலைதளத்தை முழுமையாக இந்திக்கு மாற்றம் செய்திருப்பது கண்டிக்கத்தக்கது என விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். இது குறித்துப் பேசியுள்ள அவர், " பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து தொடர்ச்சியாக இதுப்போன்ற சேட்டைகளை செய்து வருகின்றன.பதவியேற்று நாடாளுமன்ற அவைக்கு சென்ற போது வழங்கப்பட்ட சுற்றறிக்கை முழுவதும் இந்தியில் இருந்தது. இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த பிறகு தான் ஆங்கிலம் மற்றும் இந்தியில் சுற்றறிக்கை வழங்கப்பட்டது.

"பாஜக ஆட்சியில் இந்தி திணிப்பு தொடர்ந்து வருவது கண்டிக்கத்தக்கது" - திருமாவளவன் விமர்சனம் !

இந்தியாவில் அரசியலமைப்பு சட்டத்தால் 22 மொழிகள் அலுவலக மொழிகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால் பாஜக கட்சி திட்டமிட்டு வேண்டுமென்றே இந்தி மொழி பேசாத பிற மாநிலங்களை நசுக்கும் வகையில் தொடர்ந்து இந்தித் திணிப்பு, சமஸ்கிருத தணிப்பு போன்ற நடவடிக்கைக்களில் ஈடுப்பட்டு வருகிறது.

LIC வலைதளத்தை முழுமையாக இந்திக்கு மாற்றம் செய்திருப்பது கண்டிக்கத் தக்கது. இதனை உடனடியாக மாற்றி அமைக்க வேண்டும்.இந்தி பேசாத பிற மாநிலங்களில் உள்ள மக்களுக்கு பயன்பெறும் வகையில் ஆங்கிலத்தில் வழக்கம்போல் நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்திகிறோம்" என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories