உத்தர பிரதேச மாநிலம், லக்னோவில் உள்ள குவாஜா மொய்னுதீன் சிஷ்டி மொழி பல்கலைக்கழகத்தின் 9-ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில், அம்மாநில ஆளுநர் ஆனந்திபென் படேல் பங்கேற்றார்.
இந்நிகழ்சியில் பேசிய அவர், பண்டைய இந்தியாவின் முனிவர்கள் மற்றும் அறிஞர்களின் கண்டுபிடிப்புகள் இன்று உலகிற்கு நன்மை செய்து வருகிறது. அப்படிதான் தான் பரத்வராஜ் என்ற முனிவர்தான் விமானம் பறக்கும் தத்துவத்தை கண்டுபிடித்தார். இதற்கான ஆதாரங்கள் ராமாயணம் மற்றும் மகாபாரதம் நூல்களில் உள்ளது.
ஆனால் விமானம் பறக்கும் தத்துவத்தை கண்டுபிடித்தது ரைட் சகோதரர்கள் என்று அங்கீகரிக்கப்பட்டுள்ளது. நமது பண்டைய கண்டுபிடிப்புகளை தாங்கள் கண்டுபிடித்ததாக மேலைநாட்டினர் கூறிவருகிறார்கள். எனவே மாணவர்கள் பண்டைய இந்திய நூல்களை ஆராய வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, அறிவியலுக்கு எதிராக பல்கலைக்கழகத்தில் பேசிய ஆளுநர் ஆனந்திபென் படேலுக்கு கல்வியாளர்கள் கடும் எதிர்ப்புகளை பதிவு செய்து வருகிறார்கள்.