தமிழ்நாடு

471 நாட்கள் சிறைவாசத்திற்கு பிறகு, பிணையில் வெளிவந்தார் செந்தில் பாலாஜி! : தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு!

471 நாட்கள் சிறைவாசத்திற்கு பிறகு புழல் சிறையில் இருந்து வெளிவந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு, தி.மு.க.வினர் ஆரவாரத்துடன் உற்சாக வரவேற்பு.

471 நாட்கள் சிறைவாசத்திற்கு பிறகு, பிணையில் வெளிவந்தார் செந்தில் பாலாஜி! : தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

தமிழ்நாட்டில் உள்ள ஆளும் கட்சி தலைவர்களை சிறைப்படுத்தி, நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் வென்றுவிடலாம் என்ற பா.ஜ.க.வின் எண்ணம், தி.மு.க தலைமையிலான கூட்டணி சாதித்த 40க்கு 40 வெற்றியால் சிதைந்து போனது.

அவ்வாறு, ஒன்றிய பா.ஜ.க முன்னெடுத்த குறுக்கு வழியில், அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட செந்தில் பாலாஜிக்கு பிணை வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

அதனையடுத்து, உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் 25 லட்சம் ரூபாய் இரு நபர் பிணை உத்தரவாதம் தாக்கல் செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி விடுதலையாக உத்தரவு பிறப்பித்தார்.

471 நாட்கள் சிறைவாசத்திற்கு பிறகு, பிணையில் வெளிவந்தார் செந்தில் பாலாஜி! : தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு!

25 பக்க பிணை உத்தரவின் நகல் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. செந்தில் பாலாஜியின் பாஸ்போர்ட்-டும் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில், 471 நாட்கள் சிறைவாசத்திற்கு பிறகு புழல் சிறையில் இருந்து வெளிவந்தார் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி. சட்டப்போராட்டம் நடத்தி வெளிவந்த முன்னாள் அமைச்சருக்கு, தி.மு.க.வினர் ஆரவாரத்துடன் உற்சாக வரவேற்பளித்தனர்.

banner

Related Stories

Related Stories