தமிழ்நாடு

ஆன்மீக சொற்பொழிவு என்ற பெயரில் மூடநம்பிக்கை : சர்ச்சைக்குள்ளான விஷ்ணுவுக்கு 20-ம் தேதி வரை சிறை !

பள்ளிகளில் ஆன்மீக சொற்பொழிவு என்கிற பெயரில் மாற்றுத்திறனாளிகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்ட விஷ்ணு சிறையில் அடைக்கப்பட்டார்.

ஆன்மீக சொற்பொழிவு என்ற பெயரில் மூடநம்பிக்கை : சர்ச்சைக்குள்ளான விஷ்ணுவுக்கு 20-ம் தேதி வரை சிறை !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

சென்னை அசோக் நகர் அரசு பள்ளி மற்றும் சைதாப்பேட்டை பள்ளியில் ஆன்மீக சொற்பொழிவு என்ற பெயரில் மாணவர்கள் மத்தியில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை விஷ்ணு என்பவர் பேசியது சர்ச்சையை ஏறபடுத்தியது. இந்த விவகாரம் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதியளித்தார்.

இதனிடையே மாற்றுத்திறனாளிகள் குறித்து அவதூறாக பேசியதாக மாற்றுத்திறனாளி சங்க உறுப்பினர்கள் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் இந்தியா திரும்பிய விஷ்ணுவை சைதாப்பேட்டை போலீசார் கடந்த சனிக்கிழமை விமான நிலையத்தில் வைத்து கைது செய்தனர்.

பின்னர் அவர் மீது ஐந்து பிரிவின் கீழ் வழக்குபதிவு செய்து எழும்பூர் குடியிருப்பு வளாகத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதன் அடிப்படையில் கடந்த திங்கட்கிழமை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் ஏழு நாட்கள் அனுமதி கேட்டு மனு அளித்திருந்தனர்.

ஆன்மீக சொற்பொழிவு என்ற பெயரில் மூடநம்பிக்கை : சர்ச்சைக்குள்ளான விஷ்ணுவுக்கு 20-ம் தேதி வரை சிறை !

இந்த மனு மீதான விசாரணை புதன்கிழமை வந்த நிலையில் புழல் மத்திய சிறையில் இருந்து மகாவிஷ்ணு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டு நீதிபதி முன்பு ஆஜர் படுத்தப்பட்டார். தொடர்ந்து நடைபெற்ற விசாரணையின் முடிவில் விஷ்ணுவை மூன்று நாட்கள்போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

இதனை அடுத்து தனிப்படை போலீசார் சைதாப்பேட்டையில் வைத்து விசாரணை மேற்கொண்டு அங்கிருந்து திருப்பூரில் உள்ள பரம்பொருள் அறக்கட்டளை அலுவலகத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர். அதில் பல முக்கிய ஆவணங்கள் மற்றும் ஹார்ட் டிஸ்க்கள் பறிமுதல் செய்யப்பட்டு லேப்டாப் வழி முறையில் விசாரணையை துரிதப்படுத்தினர்.

மேலும் அசோக் நகர் அரசு பள்ளி மற்றும் சைதாப்பேட்டை பள்ளியில் நேரடியாக அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து இன்று தினம் சைதாப்பேட்டை நீதிமன்ற ஒன்பதாவது அமர்வு நீதிபதி முன்பு ஆஜர் படுத்தினர். அங்கு ஏற்கனவே அவர் நீதிமன்ற காவலில் உள்ள நிலையில் மீண்டும் 20 ஆம் தேதி வரை புழல் மத்திய சிறையில் கிடைக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். இதனையடுத்து போலீஸ் பாதுகாப்புடன் மீண்டும் மகாவிஷ்ணு அழைத்துச் செல்லப்பட்டார்.

banner

Related Stories

Related Stories