தமிழ்நாடு

”முதலீடுகளில் சாதித்து காட்டிய திராவிட முதலமைச்சர்” : அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பெருமிதம்!

இந்தியாவின் No.1 முதலமைச்சரின் அமெரிக்கப் பயணம் வெற்றி பெற்றுள்ளதாக அமைச்சர் டி.ஆர்.பிராஜா பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

”முதலீடுகளில் சாதித்து காட்டிய திராவிட முதலமைச்சர்” : அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பெருமிதம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முதலமைச்சரின் 17 நாட்கள் அமெரிக்க பயணத்தின்போது முதலமைச்சர் முன்னிலையில் அமெரிக்க நாட்டின் சான் பிரான்சிஸ்கோ மற்றும் சிகாகோவில் உலகின் 18 முன்னணி நிறுவனங்களுடன் ரூபாய் 7,616 கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டது.

இதனைத் தொடர்ந்து தொழில்துறையில் புதிய திருப்புமுனையாக அமெரிக்க அரசுமுறைப் பயணம் அமைந்த நிலையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்பினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா,”தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான நமது அரசின் அமெரிக்க பயணத்தில் 7616 கோடி ரூபாய் புதிய முதலீடாக ஈர்க்கப்பட்டு, 11,516 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன.

முதலமைச்சரின் கோரிக்கையை ஏற்று ஃபோர்டு நிறுவனம் தனது உற்பத்தி ஆலையை மீண்டும் துவங்கப் போவதாக அறிவித்துள்ளது. அமெரிக்க பயணத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தமிழ்நாட்டில் 100 சதவீதம் முதலீடாக மாறி, மாநிலத்தில் பரவலான வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தருவது நிச்சயம். மீண்டும் சொல்கிறேன் இது ஆரம்பம் மட்டுமே. இந்தியாவின் முதன்மை முதல்வரான திராவிட நாயகர் அதனை சாதித்துக் காட்டுவார்.

இந்தியாவின் No.1 முதலமைச்சர் என அனைவராலும் போற்றப்படும் திராவிட நாயகர் முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலுடன் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான நமது அரசின் அமெரிக்க பயணம் வெற்றிகரமாக நிறைவேறியிருக்கிறது.

எதிர்க்கட்சிகளில் சிலர், ஏன் இன்னும் அதிகப்படியான முதலீடுகளை ஈர்க்கவில்லை என்று கேள்விகளை எழுப்புகிறார்கள். முதலமைச்சரைப் பொறுத்தவரை புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் மதிப்பு எவ்வளவு என்பதை விட அவை எந்த அளவிற்கு முதலீடாக மாற்றப்பட்டு, மக்களுக்கு வேலை வாய்ப்புகள் உருவாகும் என்பதில்தான் மிகுந்த கவனமாக இருக்கிறார். எனவே தான் முதலீடாக மாறும் உறுதித் தன்மை கொண்ட நிறுவனங்களுடன் மட்டுமே ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன” என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories