தமிழ்நாடு

8 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. குற்றவாளிக்கு 30 ஆண்டு சிறை தண்டனை: மகிளா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

கரூரில் சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு 30 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 2 ஆயிரம் அபராதம் விதித்து கரூர் மகிளா விரைவு நீதிமன்ற நீதிபதி நசீமா பானு அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளார்.

8 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. குற்றவாளிக்கு 30 ஆண்டு சிறை தண்டனை: மகிளா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கரூர் சின்ன ஆண்டான்கோவில் சரஸ்வதி நகரைச் சேர்ந்தவர் கார்த்திக் - நாகமணி, இவர்களது 8 வயது மகனை அருகில் வசித்து வரும் சலவைத் தொழிலாளி சண்முகவேல் என்பவர் கடந்தாண்டு சாக்லேட் மற்றும் பிஸ்கட் தருவதாக அழைத்துச் சென்று சலவை செய்யும் அறைக்குள் வலுக்கட்டாயமாக பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார்.

இதனையடுத்து சிறுவன் பெற்றோரிடம் தெரிவித்ததைத் தொடர்ந்து, அவரது பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து கரூர் நகர காவல் நிலையத்தில் சலவை தொழிலாளி சண்முகவேல் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த வழக்கு கரூர் மகிளா விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நசீமாபானு இன்று தீர்ப்பு வழங்கினார். அப்போது, சிறுவனை ஏமாற்றி கடத்திச் சென்ற குற்றத்திற்காக 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ஆயிரம் ரூபாய் அபராதம், கட்டத் தவறினால் ஓராண்டு சிறை தண்டனை வழங்கியும், போக்சோ சட்ட பிரிவின்படி 20 ஆண்டுகள் கடுமையான சிறை தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும், கட்டத் தவறினால் ஒரு ஆண்டு மெய்க்காவல் சிறை தண்டனை விதித்து நீதிபதி நசீமா பானு தீர்ப்பு வழங்கியுள்ளார்.

மேலும், சிறுவன் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பாதிப்பு ஏற்பட்டதற்கு அரசு 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க பரிந்துரை செய்துள்ளார்.

banner

Related Stories

Related Stories