தமிழ்நாடு

ஒன்றிய அரசால் புறக்கணிக்கப்பட்ட அலங்கார ஊர்திகள்... சென்னையில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் அணிவகுப்பு!

டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் அனுமதி மறுக்கப்பட்ட தமிழ்நாட்டின் அலங்கார ஊர்திகள் சென்னையில் நடைபெற்ற அணிவகுப்பில் பங்கேற்றன.

ஒன்றிய அரசால் புறக்கணிக்கப்பட்ட அலங்கார ஊர்திகள்... சென்னையில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் அணிவகுப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

இந்தியாவின் 73வது குடியரசு தினம் கோலாகலமாக நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. 73வது குடியரசு தினத்தை முன்னிட்டு, சென்னை மெரினாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.

குடியரசு தினத்தை முன்னிட்டு பல்வேறு வீர தீர விருதுகளையும், சாதனைகள் செய்தவர்களுக்கான விருதுகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். முப்படை வீரர்கள், காவல்துறையினர் அணிவகுப்பு நடைபெற்றது.

பின்னர் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு இடம்பெற்றது. டெல்லி குடியரசு தின அணிவகுப்பில் பங்குபெற இருந்த தமிழ்நாட்டின் அலங்கார ஊர்திகள் நிராகரிக்கப்பட்டன. தமிழ்நாடு அரசு இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியும் கூட அலங்கார ஊர்திக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

ஒன்றிய அரசால் புறக்கணிக்கப்பட்ட அலங்கார ஊர்திகள்... சென்னையில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் அணிவகுப்பு!

டெல்லியில் குடியரசு தின அலங்கார அணிவகுப்பில் வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில் சென்னையில் நடைபெறும் குடியரசு தின விழாவில் தமிழ்நாடு அலங்கார ஊர்திகள் காட்சிப்படுத்தப்படும் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

அதன்படி இன்று நடைபெற்ற அலங்கார ஊர்திகள் அணிவகுப்பில் வீரமங்கை வேலுநாச்சியார், மருது சகோதரர்கள், மகாகவி பாரதியார், வீரபாண்டிய கட்டபொம்மன், பூலித்தேவன், வீரன் அழகுமுத்துக் கோன் உள்ளிட்டோரின் சிலைகள் இடம்பெற்றன.

மேலும், சுதேசி கப்பல், வ.உ.சிதம்பரனார், ஒண்டிவீரன், சுப்பிரமணிய சிவா, கக்கன், உள்ளிட்டோரின் உருவங்கள் இடம்பெற்றன. அரசு இசைக்கல்லூரி மாணவ மாணவிகளின் இசை நிகழ்ச்சியுடன் அலங்கார ஊர்தி அணிவகுப்பு நடைபெற்றது.

ஒன்றிய அரசால் புறக்கணிக்கப்பட்ட அலங்கார ஊர்திகள்... சென்னையில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் அணிவகுப்பு!

அலங்கார ஊர்தியில் தந்தை பெரியார், இரட்டைமலை சீனிவாசன்,காயிதே மில்லத், ஜோசப் செல்லதுரை குமரப்பா உள்ளிட்டோரின் சிலைகள் இடம்பெற்றிருந்தன.

30 நிமிடங்களில் குடியரசு தின விழா நிறைவுபெற்றது. கொரோனா பரவல் காரணமாக குடியரசு தின விழாவில் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

banner

Related Stories

Related Stories