சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் சென்னை சிந்தாதிரிப்பேட்டை,ராயப்பேட்டை, ஜாம்பஜார் ஆகிய இடங்களில் கொரானா நிவாரணமாக அரிசி,பருப்பு எண்ணெய் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் பொதுமக்களுக்கு வீடு வீடாகச் சென்று வழங்கினார்.
சிந்தாரிப்பேட்டை, திருவல்லிக்கேணி மெயின் ரோடு, ஆகிய இடங்களில் கொரானா தடுப்பூசி மையத்தை பார்வையிட்டு, தடுப்பு ஊசி செலுத்தி கொண்டவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்பு உதயநிதி ஸ்டாலின் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்து பின்பு மதிய உணவை பொதுமக்களுக்கு வழங்கினார்.
அதனை அடுத்து மயிலாப்பூர் சுப்பிரமணியம் சாலையில் உள்ள அம்மா உணவகத்தில் ஆய்வு மேற்கொண்டார், உணவு தயாரிக்கும் இடத்திற்கு நேரில் சென்று அங்கு வைக்கப்பட்டிருந்த உணவை சுவைத்துப் பார்த்தார், தினந்தோறும் எத்தனை டோக்கன்கள் வழங்கப்படுகிறது உள்ளிட்டவற்றை பற்றி அதிகாரிகளிமும், ஊழியர்களிடமும் கேட்டறிந்தார்.
மேலும் அதே பகுதியில் உள்ள தடுப்பூசி முகாமை உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்து கொரானா நிவாரண பொருட்களை வழங்கினார், அப்பொது அப்பகுதியை சேர்ந்த மகேஷ் என்பவரின் குழந்தைகள் சஞ்சனா மற்றும் கீர்த்தனா ஆகியோரின் சேமிப்பு உண்டியலை இருவரும் சேர்ந்து முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு சட்டமன்ற உறுப்பினர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களிடம் வழங்கினார்கள், அவர்களுடன் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் உரையாடினார்.