விளையாட்டு

ரஞ்சி கோப்பை அணியிலிருந்து நீக்கம் : Insta பதிவால் பிரித்வி ஷாவுக்கு வந்த சிக்கல்... வாரியத்துடன் மோதலா ?

தற்போது நடைபெற்று வரும் ரஞ்சிக்கோப்பை தொடருக்கான மும்பை அணியில் இருந்து நட்சத்திர வீரர் பிரித்வி ஷா நீக்கப்பட்டுள்ளார்.

ரஞ்சி கோப்பை அணியிலிருந்து நீக்கம் : Insta பதிவால் பிரித்வி ஷாவுக்கு வந்த சிக்கல்... வாரியத்துடன் மோதலா ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

மும்பையைச் சேர்ந்த இளம் வீரரான பிரித்வி ஷா இந்திய அணியின் வருங்கால நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்வார் எனப் பலராலும் பாராட்டப்பட்டவர். சிறுவயதிலேயே சிறப்பாக ஆடிய அவர் தனது 17-வயதிலேயே ரஞ்சிக்கோப்பை தொடரில் அறிமுகமானவர்.

2016-2017 ரஞ்சி டிராபி அரையிறுதிப் போட்டியில் மும்பை அணிக்காக விளையாடி இரண்டாவது இன்னிங்ஸில் தனது முதல் சதத்தைப் பதிவு செய்து ஆட்ட நாயகன் விருதையும் பெற்றார்.அ தனைத் தொடர்ந்து 2018ம் ஆண்டு நியூசிலாந்தில் நடைபெற்ற 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பேற்றார்.

அந்த தொடரில் சிறப்பாக செயல்பட்ட அவர் உலகக்கோப்பையையும் வென்று அசத்தினார். அதே ஆண்டில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் அவருக்கு இந்திய அணியில் இடம் வழங்கப்பட்டது. ஆரம்பத்தில் சிறப்பாக செயல்பட்ட அவர் அடுத்தடுத்து மோசமாக செயல்பாட்டை வெளிப்படுத்தினார்.

ரஞ்சி கோப்பை அணியிலிருந்து நீக்கம் : Insta பதிவால் பிரித்வி ஷாவுக்கு வந்த சிக்கல்... வாரியத்துடன் மோதலா ?

இதன் காரணமாக இந்திய அணியில் இருந்து அவர் நீக்கப்பட்டார். தற்போது ரஞ்சிக்கோப்பை தொடர் நடைபெற்று வரும் நிலையில், மும்பை அணியில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார். பிரித்வி ஷா பயிற்சிக்கு வராமல் இருந்ததாகவும், உடல்தகுதியை முறையாக பராமரிக்காததாலும் நீக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்த அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து 'எனக்கு ஓய்வு தேவைப்பட்டது. நன்றி!' என பிரித்திவி ஷா இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி ஒன்றை பதிவிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து அவர் மும்பை கிரிக்கெட் வாரியத்தை விமர்சித்து இதனை பதிவிட்டிருந்ததாக விமர்சனம் எழுந்த நிலையில், தனது பதிவை நீக்கியுள்ளார். அவரின் இந்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories