Politics

🔴Live| தேர்தல் முடிவுகள் : 2 லட்ச வாக்குகள் வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி முன்னிலை!

🔴Live| தேர்தல் முடிவுகள் : 2 லட்ச வாக்குகள் வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி முன்னிலை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on
23 November 2024, 07:02 AM

ஜார்க்கண்டில் பாஜக தொடர் பின்னடைவு !

ஜார்க்கண்ட் மாநிலத்தில் 81 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 50 இடங்களில் இந்தியா கூட்டணி முன்னிலை !

பாஜக 29 இடங்களை பெற்று பின்னடைவு !

23 November 2024, 06:02 AM

பிரியங்கா காந்தி 2.27 லட்சம் வாக்குகளில் முன்னிலை!

கேரளா மாநிலம், வயநாடு மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி 2.27 லட்சம் வாக்குகளில் முன்னிலை !

23 November 2024, 05:43 AM

நாந்தேட் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் முன்னிலை !

மகாராஷ்டிராவின் நாந்தேட் மக்களவைத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் சவான் ரவிந்திர வசந்த்ராவ் முன்னிலை !

சவான் ரவிந்திர வசந்த்ராவ், நாந்தேட் தொகுதியின் மறைந்த எம்.பி. வசந்த்ராவ் பல்வாந்த்ராவ் சவானின் மகன் ஆவார்.

23 November 2024, 05:30 AM

பாஜக வேட்பாளர் சம்பாய் சோரன் பின்னடைவு !

ஜார்க்கண்டின் சராய்கேலா சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் சம்பாய் சோரன் பின்னடைவு !

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவில் இருந்து விலகிய சம்பாய் சோரன், கடந்த ஆகஸ்ட் மாதம் பாஜகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

23 November 2024, 05:16 AM

ஜார்க்கண்டில் இந்தியா கூட்டணி முன்னிலை !

ஜார்க்கண்ட் மாநிலத்தில் 81 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 56 இடங்களில் இந்தியா கூட்டணி முன்னிலை !

பாஜக 24 இடங்களை பெற்று பின்னடைவு !

23 November 2024, 05:14 AM

நாந்தேட் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் முன்னிலை !

மகாராஷ்டிராவின் நாந்தேட் மக்களவைத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் சவான் ரவிந்திர வசந்த்ராவ் முன்னிலை !

சவான் ரவிந்திர வசந்த்ராவ், நாந்தேட் தொகுதியின் மறைந்த எம்.பி. வசந்த்ராவ் பல்வாந்த்ராவ் சவானின் மகன் ஆவார்.

23 November 2024, 05:08 AM

நானா படோல் முன்னிலை !

மகராஷ்டிராவின் சகோலி தொகுதி போட்டியிட்ட அம்மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோல் முன்னிலை !

23 November 2024, 04:54 AM

இமாலய வெற்றியை நோக்கி பிரியங்கா காந்தி !

கேரளா மாநிலம், வயநாடு மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி 1,65,487 வாக்குகளில் முன்னிலை !

23 November 2024, 04:06 AM

ஆதித்யா தாக்கரே முன்னிலை !

மகாராஷ்டிராவின் வொர்லி தொகுதியில் போட்டியிட்ட சிவசேனா கட்சி (உத்தவ் பிரிவு) பொதுச் செயலாளரும், அமைச்சருமான ஆதித்யா தாக்கரே முன்னிலை !

23 November 2024, 03:59 AM

ஜார்க்கண்டில் இந்தியா கூட்டணி முன்னிலை !

ஜார்க்கண்ட் மாநிலத்தில் 81 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 43 இடங்களில் இந்தியா கூட்டணி முன்னிலை !

பாஜக 36 இடங்களை பெற்று பின்னடைவு !

23 November 2024, 03:45 AM

பிரியங்கா காந்தி 46,000 வாக்குகளில் முன்னிலை!

கேரளா மாநிலம், வயநாடு மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி 46,018 வாக்குகளில் முன்னிலை!

23 November 2024, 03:44 AM

ஜார்க்கண்ட் முதலமைச்சர் முன்னிலை !

ஜார்க்கண்டின் பர்ஹைத் தொகுதியில் போட்டியிட்ட, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவை சேர்ந்த அம்மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரன் முன்னிலை !

23 November 2024, 03:31 AM

பிரியங்கா காந்தி 29,000 வாக்குகளில் முன்னிலை!

கேரளா மாநிலம், வயநாடு மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி 29,802 வாக்குகளில் முன்னிலை!

23 November 2024, 03:22 AM

பிரியங்கா காந்தி 27,000 வாக்குகளில் முன்னிலை!

கேரளா மாநிலம், வயநாடு மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி 27,603 வாக்குகளில் முன்னிலை!

23 November 2024, 03:17 AM

வயநாட்டில் பிரியங்கா காந்தி முன்னிலை !

கேரளா மாநிலம், வயநாடு மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி 2,300 வாக்குகளில் முன்னிலை !

கடந்த நவ.13-ம் தேதி வயநாட்டில் மக்களவைத் தேர்தலுக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

23 November 2024, 03:10 AM
🔴Live| தேர்தல் முடிவுகள் : 2 லட்ச வாக்குகள் வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி முன்னிலை!

மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் தேர்தல் : வாக்கு எண்ணிக்கை தொடக்கம்!

மகாராஷ்டிரா, ஜார்க்கண்டில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருந்த நிலையில், இந்த தேர்தல் அண்மையில் நடைபெற்றது. அதாவது மொத்தம் 288 தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிராவில் கடந்த நவ.20-ம் தேதி ஒரே கட்டமாகவும், 81 தொகுதிகளை கொண்ட ஜார்க்கண்ட்டில் கடந்த நவ. 13 மற்றும் 20-ம் தேதிகளில் 2 கட்டங்களாகவும் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது.

மேலும் இவையுடன் சேர்ந்து கேரளாவின் வயநாடுக்கும், மகாராஷ்டிராவின் நான்தேட் மக்களவைத் தொகுதிகளுக்கும் மற்றும் நாடு முழுவதும் உள்ள இதர 46 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது.

இந்த சூழலில் நவம்பர் மாதம் நடைபெற்ற இந்த தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை இன்று (நவ.23) எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி தற்போது வாக்கு எண்ணிக்கை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

banner

Related Stories

Related Stories