அரசியல்

"முதல் முறையாக எனக்காக நான் பிரச்சாரம் செய்கிறேன்" - வயநாட்டில் பிரியங்கா காந்தி உருக்கம் !

"முதல் முறையாக எனக்காக நான் பிரச்சாரம் செய்கிறேன்" - வயநாட்டில் பிரியங்கா காந்தி உருக்கம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

சமீபத்தில் நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலிலும் ராகுல் காந்தி ரேபரேலி மற்றும் வயநாடு தொகுதிகளில் போட்டியிட்டார். இதில் இரண்டு தொகுதிகளிலும் லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் காந்தி அபார வெற்றி பெற்றார்.

அதனைத் தொடர்ந்து இதில் எந்த தொகுதியின் எம்.பி பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்வார் என்ற கேள்வி எழுந்த நிலையில், "ராகுல் காந்தி வயநாடு எம்.பி பதவியை ராஜினாமா செய்வார். காலியாகும் அந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார்" என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அறிவித்தார்.

இதனிடையே வயநாடு இடைத்தேர்தல் நவம்பர் 13-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் 23-ம் தேதி அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"முதல் முறையாக எனக்காக நான் பிரச்சாரம் செய்கிறேன்" - வயநாட்டில் பிரியங்கா காந்தி உருக்கம் !

அதனைத் தொடர்ந்து காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தி நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். வேட்புமனுவுக்கு முன்னதாக நடத்தப்பட்ட பேரணியில் பிரியங்கா காந்திக்கு ஏராளமான பொதுமக்கள் ஒன்றுதிரண்டு அவரை வரவேற்றனர்.

பின்னர் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி , சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் கலந்து கொண்டனர். அந்த கூட்டத்தில் பேசிய பிரியங்கா காந்தி, "1989-ம் ஆண்டு எனது தந்தைக்காக முதல் முறையாக பிரச்சாரம் செய்தேன். தொடர்ந்து பல தேர்தல்களில் எனது தாய், சகோதரர் மற்றும் சக காங்கிரஸ்காரர்களுக்காக பிரச்சாரம் செய்திருக்கிறேன். இப்போது 35 ஆண்டுகளாகி விட்டது. இப்போது முதல் முறையாக எனக்காக நான் பிரச்சாரம் செய்கிறேன்.எனக்கு நீங்கள் ஒரு வாய்ப்பு அளித்தால் உங்களின் பிரதிநிதியாக இருப்பது எனக்கு கவுரவமாகும்" என்று கூறினார். அதனைத் தொடர்ந்துட் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

banner

Related Stories

Related Stories