தமிழ்நாடு

அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

தெலுங்கு சமுதாயம் குறித்து அவதூறாக பேசிய கஸ்தூரி மீது போலிஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னையில் பிராமணர்கள் நடத்திய போராட்டத்தில் பங்கேற்று பேசிய நடிகை கஸ்தூரி, தெலுங்கு சமுதாயம் குறித்து அவதூறான கருத்துக்களை தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து அவரது பேச்சுக்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது.

ஒடுக்கப்பட்ட சமுகத்தினரை குற்றப்பரம்பரையாக சித்தரிப்பதா? என கஸ்தூரிக்கு தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் ஆ. ராசா எம்.பி கேள்வி எழுப்பி கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் வலுத்ததை அடுத்து தனது கருத்துக்கு கஸ்தூரி மன்னிப்பு கேட்டு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதற்கிடையில், அகில இந்திய தெலுகு சம்மேளனம் சார்பாக நடிகை கஸ்தூரி மீது சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் நடிகை கஸ்தூரி தெலுங்கு பெண்களை குறித்து இழிவாக பேசிவிட்டு இப்பொழுது மன்னிப்பு கேட்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

அவரை கைது செய்து நீதிமன்றத்தில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என அகில இந்திய தெலுங்கு சம்மேளனம் தனது மனுவில் வலியுறுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து நடிகை கஸ்தூரி மீது அகில இந்திய தெலுங்கு சம்மேளனம் புகார் அளித்த நிலையில், 4 பிரிவுகளில் எழும்பூர் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

banner

Related Stories

Related Stories