தமிழ்நாடு

”2026 தேர்தலிலும் திமுகவே வெல்லும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!

2026 தேர்தலிலும் திமுகவே வெல்லும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

”2026 தேர்தலிலும் திமுகவே வெல்லும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு அரசின் சார்பில் பல்வேறு புதிய திட்டங்களை கோவையில் தொடங்கிவைக்க இரண்டு நாள் பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கோவை சென்றார். அப்போது அவருக்கு வழிநெடுக கோவை மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து ”4 கிலோ மீட்டர் கடக்க ஒரு மணிநேரம் ஆனது.கோவை மக்களின் அன்பு” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழச்சியுடன் X வலைதளப் பக்கத்தில் பதிவிட்டார்.

இதற்கிடையில், கோயம்புத்தூர், விளாங்குறிச்சியில் ரூ.158.32 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள தகவல் தொழில்நுட்பக் கட்டடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார். பிறகு கோயம்புத்தூர் மாவட்டத்தில் 468.89 ஏக்கர் நிலங்கள் நில எடுப்பிலிருந்து விலக்களித்து விடுவிப்பு ஆணைகளை நில உரிமையாளர்களுக்கு வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து, கோயம்புத்தூர், தர்மராஜா கோயில் வீதி, கெம்பட்டி காலனியில் உள்ள தங்கநகை தயாரிப்பு பட்டறைகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டு, பொற்கொல்லர்களின் கோரிக்கைகள் மற்றும் தேவைகள் குறித்து கேட்டறிந்தார்.

அடுத்து, சிட்கோ தொழிற்பேட்டையில் கட்டப்பட்டு வரும் தொழிலாளர்களுக்கான தங்கும் விடுதியின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் கட்சி நிர்வாகிகளுடன் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ”2026 சட்டமன்ற தேர்தலிலும் திமுக மீண்டும் மாபெரும் பெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்பது உறுதி, அதனை கோவை மக்களின் வரவேற்பில் இருந்து தெரிந்து கொண்டேன்” என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories