ஐ.பி.எல் தொடர் கடந்த 2008ம் ஆண்டு முதல் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. அடுத்தாண்டு நடைபெற உள்ள ஐ.பி.எல் போட்டிக்கான ஏலம் அடுத்த மாதம் 19ம் தேதி நடைபெற உள்ளது. இதனால் தற்போது இருந்தே பல அணிகள் தங்கள் அணி வீரர்களை தேர்வு செய்வதில் கவனம் செலுத்தி வருகின்றனர்.
அவ்வகையில், ஒவ்வொரு அணியும் தங்களது அணியிலிருந்து வீரர்களை விடுவித்தும் வாங்கிக்கொண்டும் வருகின்றன. பல வீரர்கள் ஏற்கனவே விளையாடி வந்த அணியில் இருந்து மாற்றப்பட்டுள்ளனர். அதன்படி ஒவ்வொரு அணிகளும் விடுவித்த வீரர்களையும், தக்கவைத்து கொண்ட வீரர்களின் பட்டியலை காணலாம்.
மும்பை இந்தியன்ஸ் : நடப்பு சாம்பியன்ஸான மும்பை அணி 10 வீரர்களை விடுத்துள்ளது. 3 புதிய வீரர்களை அணியில் சேர்த்துள்ளது. மும்பை அணியின் கைவசம் 13.05 கோடி ரூபாய் உள்ளது.
சேர்க்கப்பட்ட வீரர்கள் : ட்ரெண்ட் போல்ட், தவால் குல்கர்னி, ரூதர்போர்ட்
விடுவிக்கப்பட்ட வீரர்கள் : யுவராஜ் சிங், எவின் லெவிஸ், ஆடம் மில்னே, ஜேசன் பெரெண்டர்ஃப், பரிந்தர் சரண், பென் கட்டிங், பங்கஜ் ஜெய்ஸ்வால், ரஷிக் தார், அல்சாரி ஜோசப், பூயுரான் ஹென்றிக்ஸ்
சென்னை சூப்பர் கிங்ஸ் : சென்னை அணி 6 வீரர்களை விடுத்துள்ளது. அந்த அணி 14.60 கோடி ரூபாய் கைவசம் வைத்துள்ளது.
விடுவிக்கப்பட்ட வீரர்கள் : சைதன்யா பிஷ்னாய், டேவிட் வில்லி, துருவ் ஷோரி, மோஹித் சர்மா, சாம் பில்லிங்ஸ், ஸ்காட் குகளீன்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் : கொல்கத்தா அணி 11 வீரர்களை விடுத்துள்ளது. அணியில் ஒருவரை புதிதாய் சேர்த்துள்ளது. அந்த அணி 35.65 கோடி ரூபாய் கைவசம் வைத்துள்ளது.
சேர்க்கப்பட்ட வீரர் : சித்தேஷ் லாட்
விடுவிக்கப்பட்ட வீரர்கள் : ராபின் உத்தப்பா, கிறிஸ் லின், பியூஷ் சாவ்லா, ஜோ டென்லி, யார்ரா பிரித்விராஜ், நிகில் நாயக், கே.சி.கரியப்பா, மேத்யூ கெல்லி, ஸ்ரீகாந்த் முண்டே, கார்லோஸ் பிராத்வெய்ட்
ராஜஸ்தான் ராயல்ஸ் : ராஜஸ்தான் அணி 11 வீரர்களை விடுத்துள்ளது. அந்த அணி 28.90 கோடி ரூபாய் கைவசம் வைத்துள்ளது.
சேர்க்கப்பட்ட வீரர்கள் : அங்கித் ராஜ்புத், மயங்க் மார்க்கண்டே, ராகுல் திவேதியா
விடுவிக்கப்பட்ட வீரர்கள் : ஆர்யமான் பிர்லா, ஆஷ்டன் டர்னர், இஷ் சோதி, ஜெய்தேவ் உனத்கட், லியாம் லிவிங்ஸ்டன், ஒஷேன் தாமஸ், பிரசாந்த் சோப்ரா, ராகுல் திரிபாதி, ஷுபம் ரஞ்சன், ஸ்டூவர்ட் பின்னி, சுதேசன் மிதுன்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் : பெங்களூரு அணி 12 வீரர்களை விடுத்துள்ளது. அந்த அணி 27.90 கோடி ரூபாய் கைவசம் வைத்துள்ளது.
விடுவிக்கப்பட்ட வீரர்கள் : மார்கஸ் ஸ்டாய்னிஸ், ஷிம்ரோன் ஹெட்மையர், அக்ஷ்தீப் நாத், நாதன் கவுல்டர்-நைல், காலின் டி கிராண்ட்ஹோம், பிரயாஸ் பர்மன், டிம் சவுதி, குல்வந்த் கெஜ்ரோலியா, ஹிம்மன் சிங், கிளாசன், மிலிந்த் குமார், ஸ்டெயின்
கிங்ஸ் லெவன் பஞ்சாப் : பஞ்சாப் அணி 7 வீரர்களை விடுத்துள்ளது. அந்த அணி 42.70 கோடி ரூபாய் கைவசம் வைத்துள்ளது.
சேர்க்கப்பட்ட வீரர்கள் : கிருஷ்ணப்பா கெளதம், ஜெகதீஷா சுசித்
விடுவிக்கப்பட்ட வீரர்கள் : டேவிட் மில்லர், ஆன்ட்ரூ டை, சாம் கர்ரன், வருண் சக்ரவர்த்தி, மோய்சஸ் ஹென்றிக்ஸ், பிரப்சிம்ரன் சிங், அக்னிவேசஷ் அயாச்சி
டெல்லி கேப்பிடல்ஸ் : டெல்லி அணி 9 வீரர்களை விடுத்துள்ளது. அந்த அணி 27.85 கோடி ரூபாய் கைவசம் வைத்துள்ளது.
சேர்க்கப்பட்ட வீரர்கள் : ரவிச்சந்திரன் அஸ்வின், அஜிங்க்ய ரஹானே.
விடுவிக்கப்பட்ட வீரர்கள் : அங்குஷ் பெய்ன்ஸ், பி.அய்யப்பா, கிறிஸ் மோரிஸ், காலின் இங்ரம், காலின் மன்ரோ, ஹனுமா விஹாரி, ஜலஜ் சக்சேனா, மஞ்சோத் கல்ரா, நாது சிங்.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் : ஐதராபாத் அணி 5 வீரர்களை விடுத்துள்ளது. அந்த அணி 17 கோடி ரூபாய் கைவசம் வைத்துள்ளது.
விடுவிக்கப்பட்ட வீரர்கள் : தீபக் ஹூடா, மார்ட்டின் கப்தில், ரிக்கி புய், யூசுப் பதான், ஷகிப் அல் ஹசன்
ஒவ்வொரு அணியும் குறைந்தபட்சம் ஐந்து வீரர்களை விடுவித்துள்ளது. மேலும், சில அணிகள் தங்கள் அணியின் முக்கியமான வீரர்களை விடுத்துள்ளது. இதனால் அடுத்த மாதம் நடைபெற உள்ள ஏலத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.