ஒன்றிய அரசின் திட்டங்களுக்கு வேறு பெயர் கொடுத்து மாநில அரசு புதிய திட்டங்களாக அறிமுகம் செய்துள்ளது என்றும், வீடற்றோருக்கு வீடு வழங்கும் 'பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா' திட்டத்தை ‘கலைஞர் கனவு இல்லம்' எனும் திட்டமாக மாற்றியுள்ளது என்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார்.
இந்த நிலையில், தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பு குழுவின் அதிகாரப்பூர்வ கணக்கில் பாஜக பரப்பிய பொய் குறித்த விவரம் வெளியிடப்பட்டுள்ளது. அதில்,
பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம் :
பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம் என்பது ரூ.1.2 லட்சம் வழங்கும் திட்டமாகும். இதில் ரூ.72,000 ஒன்றிய அரசும், ரூ.48,000 தமிழ்நாடு அரசும் வழங்குகின்றன.
ஒன்றிய அரசு வழங்கும் தொகை போதாது என்பதை உணர்ந்து தமிழ்நாடு அரசு, கான்கிரீட் கூரை அமைப்பதற்காக கூடுதலாக ரூ.1,20,000 வழங்குகிறது. ஆக, இத்திட்டத்தில் மொத்தம் ரூ.2,40,000 ஒரு பயனாளிக்கு வழங்கப்படுகிறது.
மேற்கண்ட ரூ.2.4 லட்சத்தில் தமிழ்நாடு அரசு 70% தொகையை வழங்குகிறது. ஒன்றிய அரசு 30% மட்டுமே தருகின்றது.
கலைஞர் கனவு இல்லம் :
இத்திட்டத்தின் முதல் கட்டமாக 1 லட்சம் வீடுகள் தலா ரூ.3.50 லட்சம் செலவில் இவ்வாண்டில் கட்டப்படும். தமிழ்நாடு அரசே ஒட்டுமொத்த நிதியையும் வழங்கும்.
கிராமகளில் ஏழை, எளிய மக்களுக்கு வீடு கட்டித்தரும் திட்டம் இதுவாகும். 2030 ஆம் ஆண்டுக்குள் 'குடிசைகள் இல்லா தமிழ்நாடு' என்ற இலக்குடன் மொத்தம் 8 லட்சம் வீடுகள் கட்டித்தரப்பட இருக்கின்றன.
பயனாளிகளுக்கு வீடு கட்ட நிலம் இல்லாவிடில், நிலத்தையும் அரசே வழங்குகிறது