இந்தியா

குழந்தை திருமணங்களை தடுக்க கூடுதல் விழிப்புணர்வு தேவை! : புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்ட உச்சநீதிமன்றம்!

இந்தியாவில் குழந்தை திருமணத்திற்கு எதிராக வகுக்கப்பட்டுள்ள நெறிமுறைகளில் சில மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது உச்சநீதிமன்றம்.

குழந்தை திருமணங்களை தடுக்க கூடுதல் விழிப்புணர்வு தேவை! : புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்ட உச்சநீதிமன்றம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

இந்தியாவில் பல தலைமுறைகளாக தொடர்ந்து வரும் குழந்தை திருமணங்களை தடுக்க, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், குழந்தை திருமணத்திற்கு முழுமையான முட்டுக்கட்டை இடப்படாமலேயே இருக்கிறது.

இந்நிலையில், இந்தியாவில் குழந்தை திருமணத்திற்கு எதிராக வகுக்கப்பட்டுள்ள நெறிமுறைகளில் சில மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது உச்சநீதிமன்றம்.

உச்சநீதிமன்றம் வெளியிட்டுள்ள தீர்ப்பில், “சிறுவர்களின் பாதுகாப்பில் அதிகாரிகள் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

குழந்தை திருமணங்களை தடுக்க கூடுதல் விழிப்புணர்வு தேவை! : புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்ட உச்சநீதிமன்றம்!

குழந்தை திருமணத்தைத் தடுக்க அனைத்து அரசு அமைப்புகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

நாடு முழுவதும் குழந்தை திருமணங்களை தடுக்க கூடுதல் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

குழந்தை திருமணங்களை தண்டனை அடிப்படையில் தடுக்க முயல்வது பயனற்றது.

குழந்தை திருமண விவகாரத்தில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குவது கடைசி முயற்சியாக இருக்க வேண்டும்” என்ற வழிகாட்டு நெறிமுறைகள் இடம்பெற்றுள்ளன.

banner

Related Stories

Related Stories