இந்தியா

தாம்பரம் விமானப்படை தளத்தில் நடைபெற்ற 'இந்திய விமானப் படையின் 92 ஆம் ஆண்டு நிறைவு விழா!'

“இந்திய விமானப் படையின் 92வது ஆண்டு நிறைவு விழாவை நடத்த உறுதுணையாக இருந்த தமிழ்நாடு அரசுக்கு நன்றி” என இந்திய விமானப்படை தளபதி ஏர் மார்ஷல் அமர் பிரீத் சிங் பேச்சு.

தாம்பரம் விமானப்படை தளத்தில் நடைபெற்ற 'இந்திய விமானப் படையின் 92 ஆம் ஆண்டு நிறைவு விழா!'
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

சென்னை தாம்பரம் விமானப்படை தளத்தில் இந்திய விமானப்படையின் 92 ஆம் ஆண்டு நிறைவு விழாவையொட்டி இந்திய விமானப்படை வீரர்களின் அணிவகுப்பு மற்றும் இந்திய விமானப்படையின் சாகச நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

இந்நிகழ்வில் இந்திய ராணுவத்தின் முப்படையின் தலைமை தளபதி ஜெனரல் அனில் சவுகான் மற்றும் இந்திய விமானப்படையின் தளபதி ஏர் மார்ஷல் அமர் பிரீத் சிங் உள்ளிட்ட முக்கிய ராணுவ உயர் அதிகாரிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

1932 ஆம் ஆண்டு இந்திய விமானப்படை முதன் முதலில் உருவாக்கப்பட்டது. அதனை கொண்டாடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் இந்திய விமான படையின் ஆண்டு விழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு இந்திய விமானப்படையின் 92 ஆம் ஆண்டு நிறைவு விழா சென்னையில் உள்ள தாம்பரம் விமானப்படை தளத்தில் நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக அக்டோபர் 6 அன்று, மெரினா கடற்கரையில் இந்திய விமானப்படையின் சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இன்றயை தினம் தாம்பரம் விமானப்படை தளத்தில் இந்திய விமானப்படையின் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் இந்திய ராணுவ வீரர்களின் சாகச நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இன்றைய நாள் இந்திய விமானப்படையின் மூன்று சேத்தக் விமானம், இந்திய விமான படையின் கொடியை வானில் பறக்க விட்ட படி பறந்து அணி வகுப்பு நிகழ்ச்சி தொடங்கியது. மூன்று பிலாடஸ் பி சி - 7 விமானம் வானில் பறந்து காட்சியளித்தது. விமான படை வீரர்கள் துப்பாக்கிகளை வைத்து அதிவேகமாக சுற்றி அணிவகுப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

தொடர்ந்து PC - 7 விமானம் பல Formation முறைகளில் இயக்கி சாகசம் நிகழ்த்தி கட்டியது. பின்னர் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஹெலிகாப்டரின் பிரச்சண்ட் விமானம் வானில் புகையை வெளியிட்டபடி திறன்களை வெளியிட்டது. உலகில் எந்த ஹெலிகாப்டர்களிடம் இல்லாத அளவிற்கு இது விரைவாக சுடும் திறன் கொண்டது.

இந்தியாவின் சிறந்த ஹெலிகாப்டர் விமான குழுவான சாரங் குழுவினரின் சாகசம் வானில் பறந்து அதன் திறன்களை வானில் நிகழ்த்தி காட்டியது. சுகோய் - 30 எம்கேஐ சோழ 950 கிலோமீட்டர் வேகத்தில் வானில் சீறி பாய்ந்த்தும் வானில் அதன் வேகத்தையும் திறன்களையும் பார்வையாளர்களுக்கு வெளிப்படுத்தியது.

மேலும் எல்லா கோணங்களிலும் திரும்பி தாக்குதல் செய்யும் திறன் கொண்டது வானில் வெடிகளை வீசி காண்பித்தது பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியது. இந்தியாவின் போர் விமானங்களில் சுகோய் -30 விமானமும் அதே போல இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் மற்றும் இந்திய வான் பாதுகாப்பிற்கான முக்கிய விமானமாக செயல்படும் தேஜஸ் விமானம் வானில் மெய்சிலிர்க்க வைத்து அதன் திறன்களை காண்பித்தது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

தாம்பரம் விமானப்படை தளத்தில் நடைபெற்ற 'இந்திய விமானப் படையின் 92 ஆம் ஆண்டு நிறைவு விழா!'

ஆசியாவிலேயே 9 விமானங்கள் கொண்ட சிறந்த விமான குழுவான சூரிய கிரண் குழுவினர் வானில் மூவர்ண கொடியை பிரதிபலிக்கும் வகையில் வண்ணங்களை வெளியிட்டு வானில் வட்டமிட்டும் இந்தியாவின் பலமான இந்திய இளைஞர்களை சுட்டிக்காட்டும் வகையில் ‘y’ வடிவில் விமானத்தை இயக்கியும் இந்திய விமான படையை குறிக்க வகையில் ‘A’ வடிவிலும் விமானத்தை இயக்கினர். மேலும், இந்திய விமான படையின் ஒற்றுமையையும் திறன்களை பறைசாற்றும் வகையில் டி என் ஏ முறையில் வானில் விமானத்தை இயக்கி பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தினார்.

முன்னதாக இந்திய விமானப்படை வீரர்கள் அணிவகுப்பில் ஈடுபட்ட போது கடும் வெயிலின் தாக்கத்தால் 5 விமானப்படை வீரர்கள் மயக்கம் அடைந்தனர். பின்னர் அவர்களை அருகே இருந்த முதலுதவி மையத்திற்கு அழைத்து சென்று முதலுதவி வழங்கப்பட்டது.

இந்திய விமானப்படை வீரர்களின் அணிவகுப்பை ஏற்றுக்கொண்ட இந்திய விமானப்படையின் தளபதி ஏர் மார்ஷல் அமர் பிரீத் சிங் மேடையில் உரையாற்றும் போது,

“இந்த நாளில் உயர்ந்த தியாகம் செய்தவர்களையும் நாட்டிற்காக உயிர்தியாகம் செய்தவர்களை நினைவு கூற கடமைப்பட்டுள்ளோம். இந்திய விமானப்படை எந்த ஒரு தற்செயல் நிலையையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டிய அவசியத்தில் உள்ளது.

மேக் இன் இந்தியா முயற்சிகளை ஆதரிப்பதன் மூலம் எம்எஸ்என் தொழில் நிறுவனம் மற்றும் அகாடமி மிகவும் நன்றாக உள்ளது. இந்திய விமானப்படையின் முதன்மை நோக்கம் இலக்கில் ஆயுதங்களை ஒவ்வொரு முறையும் சரியான நேரத்தில் வழங்குவதே ஆகும்.

வெளிநாடுகளில் கப்பல்களை மீட்கும் பணிகளிலும், மற்ற நாடுகளுக்கு உதவி செய்வதிலும் இந்திய விமானப்படை சிறப்பாக பங்காற்றியுள்ளது. ஒரு போர்வீரரின் திறமை மற்றும் தொழில்முறைக்கு சான்றாக இந்திய விமானப்படை சிறந்து விளங்குகிறது. இந்திய விமானப்படையின் சேவை இந்தியாவில் மட்டும் அல்ல வெளிநாட்டிலும் தற்போது தேவைப்படுகிறது.

குறிப்பாக பேரிடர் காலங்களில் நிவாரணம் ஆகியவற்றிற்கு நாங்கள் எப்போதும் முதன்மையாக இருப்போம் என கூறினார்.இந்த ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் மற்றும் பிற சர்வதேச சாம்பியன்ஷிப் போட்டிகளில் பல்வேறு விளையாட்டு வீரர்கள் பங்கேற்று வெற்றி பெற்றது சிறப்பாகவும் அது எங்களை பெருமையடைய செய்துள்ளது.

இந்தி விமானப்படை இன்னும் வலிமையாகவும் பாதுகாப்பாகவும் ஒரு அடையாளமாகவும் இருப்பதை உறுதி செய்வோம். தாம்பரம் அணிவகுப்பு தளபதிக்கு எனது பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறோம். இந்திய விமானப் படையின் 92வது ஆண்டு நிறைவு விழாவை நடத்த உறுதுணையாக இருந்த தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்தார்.

இந்திய விமானப் படையிடம் ஒப்படைக்கப்படும் அனைத்து பணிகளும் இனி வெற்றிகரமாக பணியாற்றி காட்டுவோம் எனவும் தனக்கு உறுதுணையாக இருந்த மனைவி சரிதாவிற்கு நன்றி தெரிவித்து கொள்வதாக தெரிவித்தார்.

இந்திய விமானப்படையின் அனைத்து வீரர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் நீங்கள் அனைவருக்கும் நல்ல ஆரோக்கியத்துடனும் தொடரந்து இந்திய விமானப்படையை வெற்றிபெற செய்வோம் என தெரிவித்தார்.

20ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் மீண்டும் நடைபெற்ற விமானப்படையின் வான் சாகச நிகழ்வு எதிர்கால தலைமுறையினருக்கான உந்துகோல்.

banner

Related Stories

Related Stories