இந்தியா

ஜம்மு காஷ்மீர் தேர்தல் - ஆட்சியை பிடித்த இந்தியா கூட்டணி : வெறுப்பு அரசியலுக்கு பாடம் புகட்டிய மக்கள்!

ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற தேர்தலில் பெறும்பான்மை பெற்று இந்தியா கூட்டணி ஆட்சியை பிடிக்கிறது.

ஜம்மு காஷ்மீர் தேர்தல் - ஆட்சியை பிடித்த இந்தியா கூட்டணி : வெறுப்பு அரசியலுக்கு பாடம் புகட்டிய மக்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

90 உறுப்பினர்கள் கொண்ட ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைக்கு செப்டம்பர் 18, 25, அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் 3 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இந்தியா கூட்டணியில், தேசிய மாநாட்டுக் கட்சி 51 தொகுதிகளிலும், காங்கிரஸ் 32 தொகுதிகளிலும், சிபிஎம் ஒரு தொகுதியிலும், ஜம்மு காஷ்மீர் தேசிய சிறுத்தைகள் கட்சி ஒரு தொகுதியிலும் போட்டியிட்டன.

அதேபோல் மெகபூபா முப்தி தலைமையிலான மக்கள் ஜனநாயகக் கட்சி 81 தொகுதிகளில் போட்டியிட்டது. பா.ஜ.க யாருடனும் கூட்டணி வைக்காமல் 62 தொகுதிகளில் மட்டும் தனித்து போட்டியிட்டது. 28 தொகுதிகளில் போட்டியிடவில்லை.

இந்நிலையில் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. 50 தொகுதிகளில் முன்னிலை பெற்று இந்தியா கூட்டணி ஆட்சியை பிடிக்கிறது. தேசிய மாநாட்டுக் கட்சி 41 தொகுதிகளிலு வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் 6 தொகுதிகளிலும், மார்க்சிஸ்ட் கட்சி 1 தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளன. அதேபோல், ஜம்மு காஷ்மீர் தேசிய சிறுத்தைகள் கட்சி 3 தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளது.

62 தொகுதிகளில் போட்டியிட்ட பா.ஜ.க 29 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. மேலும் மக்கள் ஜனநாயகக் கட்சி 1 தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது. ஆம் ஆத்மி கட்சி ஒரு தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது.

ஆட்சியை பிடிக்க 46 தொகுதிகள் தேவை என்ற நிலையில் இந்தியா கூட்டணி 49 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று ஆட்சியை உறுதி செய்துள்ளது. இந்நிலையில், ”தேசிய மாநாட்டு கட்சி தலைவர் அமர் அப்துல்லா, ஜம்மு காஷ்மீர் மக்களுக்க சேவை செய்ய மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் எங்களை அழிக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் எங்களை முடக்க நினைத்த பா.ஜ.க இன்று காணாமல் போனது” என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories