“ஜம்மு - காஷ்மீர் மக்களுக்கு சேவை செய்ய மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில், எங்களை அழிக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் எங்களை முடக்க நினைத்த பாஜக இன்று காணாமல் போனது”
- தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் உமர் அப்துல்லா பேட்டி!
வினேஷ் போகத், இன்று வெற்றி பெற்றிருப்பது வெறும் தேர்தலில் மட்டுமல்ல; சாதாரண மக்களை ஒடுக்கி, ஆதிக்கம் செலுத்தி வருபவர்களை எதிர்த்து பெற்றிருக்கும் மாபெரும் வெற்றி.
- மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா வாழ்த்து !
காங்கிரஸுடன் கூட்டு வைக்கும் எங்களின் முடிவுக்கு வெற்றி கிடைத்திருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் நேர்ந்த துயரங்களை இனி களையத் துவங்குவோம்!
- ஜம்மு காஷ்மீர் தேர்தலில் முன்னிலை பெற்றிருக்கும் தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா!
ஹரியானாவில் இருந்து முற்றிலும் மாறுபட்ட பிரச்சினைகளில் மகாராஷ்டிரா போராடுகிறது. பாஜக பதவிக்காக கட்சிகளையும், குடும்பங்களையும் உடைத்தது. தேர்தல் ஆணையத்தையும், அரசியல் சாசனத்தையும் தவறாகப் பயன்படுத்தியது. மகாராஷ்டிராவில் இருந்து தொழிற்சாலைகள் மற்ற மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. மகாராஷ்டிரா மக்கள் உணர்வுகளின் அடிப்படையில் வாக்களிப்பர்
- மகராஷ்டிராவில் இந்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், சிவசேனா (உத்தவ்) எம்.பி. பிரியங்கா சதுர்வேதி பேட்டி!
ஹரியானா சட்டப்பேரவை வாக்கு எண்ணிக்கை முடிவுகளை வெளியிடுவதில் தேர்தல் ஆணையம் தாமதம் செய்வதாக காங்கிரஸ் புகார்.
காலையில் பெரிய வித்தியாசத்தில் காங்கிரஸ் முன்னிலையில் இருந்த நிலையில், அரைமணி நேரத்தில் முடிவுகள் தலைகீழானதால் அதிர்ச்சி.
ஹரியானாவில் ஜூலான தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் 6 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி !
தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் யோகேஷ் குமாரை வீழ்த்தி வினேஷ் போகத் வெற்றி!
ஹரியானா சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் 11ம் சுற்று முடிந்த பிறகும் 4வது, 5வது சுற்று எண்ணிக்கை நிலவரத்தைதான் தேர்தல் ஆணைய இணையதளம் காட்டிக் கொண்டிருக்கிறது. ஜம்மு காஷ்மீரில் நேரடி நிலவரம் தொடர்ந்து பதிவேற்றப்படுகிறது. ஆனால் ஹரியானா நிலவரங்களில் தாமதம் இருக்கிறது.
- காங்கிரஸ் கட்சித் தலைவர் பவன் கெரா!
ஹரியானா மாநிலத்தின் ஜூலானா தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரும் மல்யுத்த வீராங்கனையுமான வினேஷ் போகத் மீண்டும் முன்னிலை.
ஹரியானாவில் 15-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் காங்கிரஸ்- பாஜக இடையே 3 ஆயிரம் வாக்குகள் மட்டுமே வித்தியாசத்தில் இருப்பதால் அங்கு பலத்த போட்டி ஏற்பட்டு வருகிறது.
மக்களவை தேர்தலைப் போலவே ஹரியானா சட்டசபை தேர்தலிலும் வாக்குப்பதிவு நிலவரங்களை இணையதளத்தில் பதிவேற்ற தேர்தல் ஆணையம் தாமதிக்க தொடங்கி விட்டது. காலாவதியான நிலவரங்களை பகிர்ந்து நிர்வாகத்தின் மீது பாஜக அழுத்தத்தை தருகிறதா?
- காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ்!
ஹரியானா மாநிலத்தின் ஜூலானா தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரும் மல்யுத்த வீராங்கனையுமான வினேஷ் போகத் மீண்டும் முன்னிலை.
ஹரியானாவில் 15-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் காங்கிரஸ்- பாஜக இடையே 3 ஆயிரம் வாக்குகள் மட்டுமே வித்தியாசத்தில் இருப்பதால் அங்கு பலத்த போட்டி ஏற்பட்டு வருகிறது.
ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத் தேர்தலில் தேசிய மாநாட்டு கட்சி தலைவர் உமர் அப்துல்லா தான் போட்டியிட்ட சுந்தர்பால், பட்காம் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் முன்னிலை.
ஜம்மு காஷ்மீரில் தேசிய மாநாட்டு கட்சி, காங்கிரஸ், CPIM அடங்கிய இந்தியா கூட்டணி பெரும்பான்மைக்கு தேவையான 45 இடங்களை விட அதிக இடங்களில் முன்னிலையில் உள்ளது.
ஜம்மு-காஷ்மீரின் குல்காம் சட்டமன்ற தொகுதியில், இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிட்ட சிபிஐ(எம்) வேட்பாளர் யூசூப் தாரிகாமி முன்னிலை!
ஜம்மு காஷ்மீர் வாக்கு எண்ணிக்கை தொடங்கும் முன்னரே ஆளுநரால் நியமிக்கப்படும் 5 நியமன எம்.எல்.ஏக்களின் பேரை பாஜகவே வெளியிட்டதால் அதிர்ச்சி.
தற்போது ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசமாக உள்ள நிலையில், அங்கு 5 நியமன எம்.எல்.ஏக்களை நியமிக்கும் அதிகாரம் ஆளுநருக்கு வழங்கப்பட்டுள்ளது.
தேசிய மாநாடு கட்சி (National Conference Party ) +2 காங்கிரஸ் (Congress) இந்தியா கூட்டணி : 51
பாஜக : 22
மக்களின் ஜனநாயக கட்சி (People's Democratic Party) : 2
மற்றவை : 15
காங்கிரஸ் : 72
பாஜக: 13
இந்திய தேசிய லோக் தளம் (Indian National Lok Dal) : 3
மற்றவை - 2
தேசிய மாநாடு கட்சி (National Conference Party ) + காங்கிரஸ் (Congress) இந்தியா கூட்டணி : 40
பாஜக : 34
மக்களின் ஜனநாயக கட்சி (People's Democratic Party) : 2
மற்றவை : 14
காங்கிரஸ் : 75
பாஜக: 10
இந்திய தேசிய லோக் தளம் (Indian National Lok Dal) : 2
மற்றவை - 3
ஹரியானா சட்டமன்றத் தேர்தலில் குருக்ஷேத்ரா பகுதியில் உள்ள லட்வா தொகுதியில் போட்டியிட்ட பாஜக முதல்வர் நயாப் சிங் சைனி பின்னடைவு.
ஹரியானாவில் ஆட்சி அமைக்க தேவையான 46 தொகுதிகளை விட கூடுதலான இடங்களில் முன்னிலை வகிக்கிறது காங்கிரஸ் கூட்டணி !
மொத்தமுள்ள 90 தொகுதிகளில் ஆளும் பாஜக வெறும் 15 இடங்களில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது.
பாஜக ஆளும் ஹரியானாவின் ஜூலானா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் முன்னிலை !
ஜூலானா தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளரும் முன்னாள் இராணுவ வீரருமான பைராகி (Bairagi) பின்னடைவு !
தேசிய மாநாடு கட்சி (National Conference Party ) + காங்கிரஸ் (Congress) இந்தியா கூட்டணி : 36
பாஜக : 18
மக்களின் ஜனநாயக கட்சி (People's Democratic Party) : 1
மற்றவை : 6
காங்கிரஸ் : 46
பாஜக: 15
இந்திய தேசிய லோக் தளம் (Indian National Lok Dal) : 1
ஹரியானா மாநிலத்தின் ஒட்டுமொத்தமாக 90 சட்டமன்ற தொகுதிகளுக்கும் கடந்த அக்டோபர் 5-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. அதே போல் ஜம்மு - காஷ்மீருக்கும் கடந்த செப்.18 முதல் அக்டோபர் 1-ம் தேதி வரை 3 கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலை தொடர்ந்து இன்று ஹரியானா மற்றும் ஜம்மு - காஷ்மீருக்கு ஒரே கட்டமாக வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
இதில் ஹரியானாவில் ஆளும் பாஜக பெரும் பின்னடைவை சந்திக்கிறது. தேர்தலுக்கு முந்தைய மற்றும் பிந்தைய கருத்துக்கணிப்பில் இந்த முறை பாஜக படுதோல்வியடையும் என்றும், காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி வெற்றி பெரும் என்று தெரியவந்தது. அதன்படி தற்போது நடைபெற்று வரும் கருத்துக்கணிப்பில் பாஜக பெரும் பின்னடைவை சந்திக்கறது.