தமிழ்நாடு

சென்னை பட்டினப்பாக்கம் நவீன மீன் அங்காடி செயல்பாட்டுக்கு வந்தது!

மீன் அங்காடி இன்று முதல் பயன்பாட்டுக்கு வந்த நிலையில் சாலையோரம் அமைக்கப்பட்டிருந்த மீன் கடைகளை அகற்றிய மாநகராட்சி பணியாளர்கள்.

சென்னை பட்டினப்பாக்கம் நவீன மீன் அங்காடி செயல்பாட்டுக்கு வந்தது!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

சென்னை, பட்டினப்பாக்கம் லூப் சாலையோரம் 300க்கும் மேற்பட்டோா் மீன் வியாபாரம் செய்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதையடுத்து சாலை நீதிமன்ற உத்தரவுப்படி, அந்தப் பகுதியில் புதிதாக ரூ.9.97 கோடி மதிப்பில் நவீன மீன் அங்காடி அமைக்கப்பட்டுள்ளது.

இந்த அங்காடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆகஸ்ட் மாதம் திறந்து வைத்த நிலையில் இங்குள்ள 366 கடைகளை விற்பனையாளா்களுக்கு ஒதுக்குவதில் தாமதம் ஏற்பட்டதால் இந்த அங்காடி பயன்பாட்டுக்கு வராமல் இருந்ததோடு சாலையோரம் கடை வைத்திருந்த வியாபாரிகளும் கடையை காலி செய்யாமல் இருந்து வந்தனர்.

சென்னை பட்டினப்பாக்கம் நவீன மீன் அங்காடி செயல்பாட்டுக்கு வந்தது!

இந்நிலையில், சாலையோரம் கடை வைத்திருந்தவர்கள் கடையை காலி செய்துவிட்டு புதிய மீன் அங்காடி வளாகத்திற்கு மாறுவதற்கு இன்று இறுதிநாளாக அறிவிக்கப்பட்ட சூழலில் தற்போதுவரை கடைகளுக்கு மாறாமல் இன்றைய தினம் சாலையோரம் மீண்டும் கடைகள் போட்டு மீன் வியாபாரம் செய்த மீன் வியாபாரிகளின் கடையை மாநகராட்சி அதிகாரிகள் இன்று அகற்றினர்.

சாலையோரம் வைத்திருந்த கடைகள் பெரும்பாலானவற்றில் இன்றைய நாள் மீன் வைத்து வியாபாரம் மேற்கொள்ளாமல் இருந்த சூழலில் சாலையை ஆக்கிரமித்தி போடப்பட்டிருந்த கடைகளை இயந்திரம் கொண்டு மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர். இதனையடுத்து, மாநகராட்சி அதிகாரிகள் ஒவ்வொரு கடையாக ஆக்கிரமிப்புகளை அகற்றிய போது எஞ்சிய கடைகளில் உள்ள பொருட்களை அவசரம் அவசரமாக வியாபாரிகள் எடுத்து வைத்தனர்.

banner

Related Stories

Related Stories