இந்தியா

AI Deep fake சேவையை ஒரே மாதத்தில் பயன்படுத்திய 24 மில்லியன் மக்கள் : 2,400 % அதிகரித்த பயன்பாடு !

AI Deep fake சேவை வழங்கும் இணையதளங்களை இந்த ஆண்டு செப்டம்பரில் மட்டும் 24 மில்லியன் மக்கள் பயன்படுத்தியிருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

AI Deep fake சேவையை ஒரே மாதத்தில் பயன்படுத்திய 24 மில்லியன் மக்கள் : 2,400 % அதிகரித்த பயன்பாடு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

சமீப சில ஆண்டுகளில் Artificial Inteligence தொழில்நுட்பம் பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கூட செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி செய்தி வாசிப்பாளரை உருவாக்கி, ஒடிசா செய்தி தொலைக்காட்சி ஒன்று சாதனை படைத்தது.

அதோடு ரஜினியின் 'ஜெயிலர்' படத்தில் இடம்பெற்ற "காவலா.." பாடலுக்கு காஜல், சிம்ரன் உள்ளிட்ட நடிகைகள் நடனமாடுவது போல் AI-ஐ பயன்படுத்தி வீடியோக்களும் வெளியானது. இதனை ஒரு தரப்பு ரசிகர்கள் ஆச்சயர்த்துடன் கண்டு ரசித்தாலும், மற்ற சிலர் அதற்கு எதிராகக் கருத்து தெரிவித்தனர்.

கடந்த வாரம் நடிகை ராஷ்மிகாவின் AI தொழில்நுட்ப வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வீடியோவில் வேறு ஒரு பெண்ணின் முகத்தில் ராஷ்மிகாவின் முகத்தை பொருத்தி அவர் பிகினி ஆடையில் இருப்பது போல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அதே போல பல்வேறு நடிகைகளின் Deep fake வீடியோ வெளியாகியுள்ளது.

AI Deep fake சேவையை ஒரே மாதத்தில் பயன்படுத்திய 24 மில்லியன் மக்கள் : 2,400 % அதிகரித்த பயன்பாடு !

இந்த நிலையில், இது போன AI Deep fake சேவை வழங்கும் இணையதளங்களை இந்த ஆண்டு செப்டம்பரில் மட்டும் 24 மில்லியன் மக்கள் பயன்படுத்தியிருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து கிராப்பிகா (Graphika) என்ற நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து தற்போது வரை எக்ஸ் , Redditt போன்ற சமூக வலைதளப் பக்கங்களில் ஆபாசப் படங்களைப் பதிவிட்டு விளம்பரம் செய்யும் இணைப்புகளில் இணையும் பயனர்கள் சதவீதம் 2,400 என்ற அளவு அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும், nudify சேவை வழங்கும் இணையதளங்களை இந்த ஆண்டு செப்டம்பரில் மட்டும் 24 மில்லியன் மக்கள் பயன்படுத்தியிருப்பதாகவும், இந்த தொழில்நுட்பம் பெரும்பாலும் பெண்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி இது போன்ற புகைப்படங்கள் திருடப்பட்டு பிற சமூக வலைத்தளங்களில் பகிரப்படுவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories