இந்தியா

ஒமைக்ரான் பரவலில் இணைந்த இந்தியா.. ஒன்றிய சுகாதாரத்துறை சொல்வது என்ன? லவ் அகர்வால் பேட்டி!

கர்நாடகாவில் இருவருக்கு தொற்று ஏற்பட்டதை அடுத்து இந்தியாவிலும் ஒமைக்ரான் பரவலின் கணக்கு தொடங்கியிருப்பது உறுதியாகியுள்ளது

ஒமைக்ரான் பரவலில் இணைந்த இந்தியா.. ஒன்றிய சுகாதாரத்துறை சொல்வது என்ன? லவ் அகர்வால் பேட்டி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கொரோனா பரவலின் மூன்றாவது அலை தொடர்பான செய்திகள் இந்தியாவில் வெளியாகி வரும் வேலையில், உலக நாடுகளில் பரவியுள்ள உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் கொரோனா தொடர்பான தகவல்கள் மக்களிடையே மீண்டும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

உலகளவில் இதுகாறும் 29 நாடுகளில் 373 பேர் ஒமைக்ரான் தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. இந்நிலையில், கர்நாடகாவைச் சேர்ந்த இருவர் ஒமைக்ரான் தொற்றுக்கு ஆளாகியுள்ளது கண்டறியப்பட்டுள்ளதாக ஒன்றிய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

ஒமைக்ரான் தொற்றுக்கு பாதிப்பிற்குள்ளான கர்நாடகவைச் சேர்ந்த இருவருக்கும் லேசான அறிகுறிகளே இதுவரையில் தென்பட்டுள்ளது என ஒன்றிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதனையடுத்து இந்தியாவிலும் ஒமைக்ரான் பரவலின் கணக்கு தொடங்கியிருப்பது உறுதியாகியுள்ளது. இது தொடர்பாக டெல்லியில் நிதி ஆயோக்கின் சுகாதாரத்துறை உறுப்பினர் விகே பால் மற்றும், ஒன்றிய சுகாதாரத்துறை இணைச் செயலாளர் லவ் அகர்வால் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது, ஒமைக்ரான் மேலும் பரவாமல் இருக்க முன்பு இருந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையே தீவிரமாக பின்பற்ற வேண்டும் என்றும் தடுப்பூசி செலுத்திக்கொள்வதை விரைவுபடுத்த வேண்டும் எனவும் லவ் அகர்வால் கூறியுள்ளார்.

மேலும் இன்று காலை வரையில் ஒமைக்ரான் பாதித்த நாடுகளில் இருந்து வந்த 7976 பேருக்கு சோதனை நடத்தப்பட்டுள்ளது என ஐசிஎம்ஆரின் இயக்குநர் பல்ராம் பார்கவா தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய லவ் அகர்வால், இந்தியா உட்பட 11 தெற்காசிய நாடுகளில் கடந்த ஒரு வாரத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 1.2 லட்சமாக பதிவாகியுள்ளது. உலகளவில் ஒப்பிடுகளையில் 3.1 சதவிகிதமாகவே உள்ளது.

ஆனால் உலகின் 70 சதவிகித கொரோனா பாதிப்புகள் ஐரோப்பிய நாடுகளிலேயே பதிவாகியுள்ளது. இது தொடர்பாக நாட்டு மக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை. ஆனால் விழிப்புணர்வுடன் செயல்படுவது காலத்தின் தேவையாக உள்ளது எனக் கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories