பிரதமரின் வேலைவாய்ப்பு திட்டத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி ஏமாற்றுபவர்களிடம் இருந்து எச்சரிக்கையாக இருக்கும்படி, மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தனி நபர்கள் அல்லது முகமைகள் பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கத் (பி.எம்.இ.ஜி.பி) திட்டத்தின் கீழ் கடன் பெற்றுதறுவதாக கூறியும், அதற்காக கடன் அனுமதி கோரி கடித்தையும் போலியாகத் தயாரித்து ஆசைக் காட்டுவதாகவும், அதிக அளவில் பணம் பெற்று பொதுமக்களை ஏமாற்றுவதாக அமைச்சகத்தின் கவனத்திற்கு வந்துள்ளது.
பி.எம்.இ.ஜி.பி திட்டத்தை அனுமதிக்க, முன்னெடுக்க அல்லது எந்த ஒரு நிதி உதவியும் அளிக்க எந்த ஒரு தனிநபருக்கு /முகவருக்கு / இடைத்தரகருக்கு / கிளை நிறுவனங்கள் உள்ளிட்ட அமைப்புகளுக்கு அதிகாரம் அளிக்கப்படவில்லை.
எனவே, இதுபோன்ற நடவடிக்கை முற்றிலும் சட்டவிரோதமாகும்; மேலும் போலியான நடவடிக்கையாகும். ஆகையால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தப்படுகின்றனர்.
மத்திய அரசின் அமைச்சகத்தின் பேரில் பல போலி நிறுவனங்களை தொடங்கி முறைகேடுகள் அதிகரித்துள்ளது. அறிக்கை வெளியிட்டு மக்களை எச்சரிப்பதை விட, குற்றச்செயலில் ஈடுபடுவர்களை அடையாளம் கண்டு அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.