103வது நவம்பர் புரட்சி தினத்தையொட்டி சென்னை தியாகராய நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று புரட்சி கொடியேற்றப்பட்டது. அப்போது கொடிக்கு மரியாதை செலுத்தி, புரட்சி கோஷமிட்டனர்.
பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன், மனித குலத்தின் மகத்தான விடியல் 103வது நவம்பர் புரட்சி தினமாகும். எந்தவொரு ஏகாதிபத்திய நாடும் மக்களை பாதுகாக்கவில்லை. பொதுவுடமை கொள்கையை பின்பற்றும் நாடுகள் தான் மக்களை பாதுகாத்து வருகின்றது. மக்களை வதைக்கும் மோசமான பொருளாதார கொள்கையை மோடி அரசு கடைபிடித்து வருகிறது.
வரும் 26ஆம் தேதி விவசாயத்தை கார்பரேட்டுக்கு தாரைவார்க்கும் செயலை கண்டித்தும், பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்ப்பதை கண்டித்தும் நடைபெறும் போராட்டத்தில் தொழிலாளர்கள் விவசாயிகள் மட்டுமல்லாது அனைவரும் பங்கேற்று மோடி அரசிற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
மேலும், பட்டாசு வெடிக்க 4 மாநிலத்திற்கு தடைவிதித்துளதை நீக்கி,குறிப்பாக பட்டாசு தொழிலை மட்டுமே வைத்து வாழ்க்கை நடத்தி வரும் விருதுநகர் மாவட்ட மக்கள் பெறும் பாதிப்படைந்துள்ளனர். அதை நீக்க முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளோம். மீண்டும் ஒருமுறை மக்கள் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வேல் யாத்திரை மூலம் தனது கொள்கையை தமிழகத்தில் கொண்டு வரவும், தமிழகத்தின் அமைதியை சீர்குலைக்க வேண்டும் என்ற நோக்கில் பாஜக செயல்படுகிறது .வேல் யாத்திரைக்கான தடை தாமதம் என்றாலும் வரவேற்கிறோம். ஆனால் அதை தொடர்ந்து அடுத்த மாதம் 6ம் தேதி வரை நடத்துவோம் என தெரிவித்துள்ளது அனைவரையும் அச்சுறுத்தும் செயலாக உள்ளது.
வேல் யாத்திரை தொடர்ந்து நடைபெறுவதை அரசு தடுத்து நிறுத்த வேண்டும். காவல் நிலையை படுகொலையை முறையாக தடுத்து நிறுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.