தி.மு.க

“பா.ஜ.க போன்ற எந்தவொரு அதிகாரத்திற்கும் தலைவணங்கவோ வளைந்துகொடுக்கவோ மாட்டோம்” : மு.க.ஸ்டாலின் பேட்டி!

தமிழகத்திற்கு வெளியே எந்த அதிகாரத்திற்கும் வளைந்து கொடுக்கமாட்டோம் என்பதை தமிழக மக்கள் காண்பிப்பார்கள் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

“பா.ஜ.க போன்ற எந்தவொரு அதிகாரத்திற்கும் தலைவணங்கவோ வளைந்துகொடுக்கவோ மாட்டோம்” : மு.க.ஸ்டாலின் பேட்டி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

‘டி.டி. நெக்ஸ்ட்’ ஆங்கில நாளிதழுக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அளித்த சிறப்புப் பேட்டியில், தமிழ்நாட்டிற்கான எனது பார்வை மார்ச் 7 ஆம் தேதி திருச்சியில் வெளியிடுவேன், இது தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாநிலத் துறையையும் நாட்டிலேயே சிறந்ததாக மாற்றுவதற்கான எங்கள் திட்டத்தை கோடிட்டுக் காட்டும் எனத் தெரிவித்துள்ளார்.

இப்பேட்டியின் முதல் பகுதி இங்கே... “உதயநிதியின் அரசியல் பயணத்தை தீர்மானிக்கப்போவது மக்கள்தான்” - DTNEXT பேட்டியில் மு.க.ஸ்டாலின் பதில்!

‘டி.டி. நெக்ஸ்ட்’ ஆங்கில நாளிதழுக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அளித்துள்ள பேட்டியின் இரண்டாவது பாகம் பின்வருமாறு:

கேள்வி : உங்கள் பிரச்சார பாடலான “ஸ்டாலின்தான் வாராரு, விடியல் தரப் போராரு’’ என்ற பாடலை எதிர்கொள்ள “வெற்றிநடை போடும் தமிழகம்” என்ற பிரச்சாரத்தை அ.தி.மு.க. தொடங்கியுள்ளது. வளமான ஆளும் கட்சியுடன் நீங்கள் எவ்வாறு பொருந்துவீர்கள்?

மு.க.ஸ்டாலின் : பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள லட்சக்கணக்கான மக்கள், அரசின் தவறான நிதி கையாளுகையால் கடனுக்கு ஆளாகி வரும் கடந்த ஆண்டுகளில், மக்கள் அடிப்படை தேவை களுக்குக்கூட சிரமப்படுகிறார்கள், அ.தி.மு.க அரசு வரி செலுத்துவோரின் பணத்தை தேர்தல் பிரச்சாரங்களுக்கு பயன்படுத்தியது. இது ஒரு கிரிமினல் செயல். அ.தி.மு.கவின் தவறான பத்து வருட ஆட்சிக்குப் பிறகு இதுதான் வருந்தத்தக்க நிலை, இந்நிலையில் தமிழ்நாடு எவ்வாறு அ.தி.மு.க.வுடன் வெற்றிநடை போட்டு செல்ல முடியும்? ‘ஸ்டாலின் தான் வாராரு’ என்பது மக்களின் பிரச்சாரம், என்னுடையது அல்ல.

கேள்வி : இந்த முறை கூட்டணி கட்சிகளுக்கு இடங்களை ஒதுக்குவதை தி.மு.க குறைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தி.மு.க 2016ல் போட்டியிட்ட 50 சதவிகித இடங்களுக்கு மேல் வென்றது, அதே நேரத்தில் உங்கள் கூட்டணிக் கட்சிகள் 20 சதவிகித மட்டுமே வென்றன. இந்தமுறை 200 இடங்களை வெற்றிக்கு நிர்ணயித்துள்ளீர்கள். உங்கள் தொகுதிப் பகிர்வு முறை 2021ல் வேறுபட்டிருக்குமா?

மு.க.ஸ்டாலின் : தி.மு.க கூட்டணியின் முக்கிய நோக்கம் என்னவென்றால், தமிழகத்தின் நலனுக்கு எதிரான கூட்டணியாக அ.தி.மு.க.வும் பி.ஜே.பி கூட்டணிக்கு எதிராக அரசியல், கொள்கை ரீதியாக எதிரான நாங்கள் கூட்டணி அமைத்துள்ளோம். எங்கள் ஒற்றுமை அனைத்து 200+ தொகுதிகளிலும் வெற்றியை நோக்கி எங்களை துரிதப்படுத்தும்.

கூட்டணி கட்சிகளுக்கு எங்கள் சின்னத்தில் போட்டியிட நாங்கள் ஏற்கனவே கேட்டுக்கொண்டோம், ஆனால் அவர்கள் தங்கள் சொந்த சின்னங்களின் கீழ் போட்டியிட தேர்வு செய்தால் நாங்கள் அவர்கள் எண்ணத்தை மதிக்கிறோம்.

“பா.ஜ.க போன்ற எந்தவொரு அதிகாரத்திற்கும் தலைவணங்கவோ வளைந்துகொடுக்கவோ மாட்டோம்” : மு.க.ஸ்டாலின் பேட்டி!

கேள்வி: புதிய கூட்டணி கட்சிகளுக்கு, குறிப்பாக கமலின் ம.நீ.மய்யத்துக்கு இடமளிக்கும் வாய்ப்புகளை நீங்கள் நிராகரிக்கவில்லை. மேலும் கூட்டணியில் கட்சிகளுக்கு இடம் இருக்கிறதா?

மு.க.ஸ்டாலின் : இந்த நேரத்தில், நம்முடையது மெகா கூட்டணி, முற்போக்கான சித்தாந்தத்தில் வேரூன்றியுள்ளது. வாக்கெடுப்பு தேதிகள் இப்போது அறிவிக்கப்பட்டுவிட்டதால், சிறிய கட்சிகள் தொடர்ந்து எங்களை அணுக உரிமை உண்டு.

கேள்வி : உங்கள் பிரச்சாரத்தின் மற்றொரு அம்சம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரண பிரச்சினை. தி.மு.க மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அவரது மரணம் குறித்து முழுமையான விசாரணைக்கு உத்தரவிடப்படும் என்று நீங்கள் மீண்டும் வலியுறுத்தியுள்ளீர்கள். தி.மு.க ஜெயலலிதாவின் மரணத்தில் ஏன் இத்தகைய அக்கறை காட்டுகிறது?

மு.க.ஸ்டாலின் : ஜெயலலிதாவின் மரணத்தைப் பிரச்சார பொருளாக்குதல் காரணம் அல்ல. இது தமிழ்நாட்டின் பெரும்பாலான மக்கள் தெரிந்துகொள்ள விரும்பும் ஒன்று. அவரது மரணத்தின் மர்மமான சூழ்நிலைகள் எல்லோரும் கவலைப்பட வேண்டிய ஒன்று. இறக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும், மரணத்திற்கான காரணத்தை நாங்கள் ஆராய்வோம் - அது யாராக இருந்தாலும் சரி. இன்னும் முதல்வரைப் பொறுத்தவரை இதை செய்யவில்லை.

அ.தி.மு.க.வைவிட அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து தி.மு.க அக்கறை காட்டுவது விசித்திரமாகத் தோன்றலாம், அதே நேரத்தில் ஓ.பி.எஸ் கூட அதைப் பற்றி கேட்பதை நிறுத்திவிட்டார். இது நேர்மையான செயல் அல்ல. நாங்கள் ஒரு வெளிப்படையான விசாரணையை விரும்புகிறோம், அதனைச் செய்ய நாங்கள் தமிழக மக்களுக்கு கடமைப்பட்டுள்ளோம்.

கேள்வி : பிரதமர் நரேந்திர மோடியின் சென்னை விஜயம் அ.தி.மு.கவில், குறிப்பாக முதல்வர் வேட்பாளர் பிரச்சினை தொடர்பாக கூறப்படும் வேறுபாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்ததாக ஒரு ஊகம் உள்ளது. தங்கள் கருத்து?

மு.க.ஸ்டாலின் : அ.தி.மு.க அவர்களின் உடலையும் ஆன்மாவையும் மத்தியில் உள்ள பா.ஜ.க அரசுக்கு விற்றுவிட்டது. டெல்லியில் இருந்து, பா.ஜ.க. அ.தி.மு.கவின் உள் விஷயங்கள் மற்றும் அரசியலைக் கட்டுப்படுத்துகிறது. அவர்கள் சொந்தமாக விஷயங்களைத் தீர்க்கும் திறனை முற்றிலுமாக இழந்துவிட்டார்கள். இந்த அடிமை அரசாங்கம் குழப்பமடைந்து, தங்கள் எஜமானர்கள் என்ன செய்ய வேண்டும் என்கிறார்களோ அதைச் செய்கிறார்கள்.

“பா.ஜ.க போன்ற எந்தவொரு அதிகாரத்திற்கும் தலைவணங்கவோ வளைந்துகொடுக்கவோ மாட்டோம்” : மு.க.ஸ்டாலின் பேட்டி!

கேள்வி : பா.ஜ.க தலைவர்கள் திராவிடக் கட்சிகள் இல்லாத ஒரு தமிழ்நாட்டை உருவாக்குவோம் என்று பகிரங்கமாக அறிவித்துள்ளனர். எதிர்காலத்தில் பா.ஜ.க போன்ற ஒரு தேசியக் கட்சி உங்கள் பரம எதிரியாக மாறுவதை நீங்கள் காண்பீர்களா?

மு.க.ஸ்டாலின் : நீங்கள் திராவிட கட்சிகளை குறைத்து மதிப்பிடுகிறீர்கள். இந்தத் தேர்தல் தமிழர்களுக்கும் தமிழகத்தை ஆள விரும்புவோருக்கும் இடையில் உள்ளது. தமிழகத்திற்கு வெளியே எந்த அதிகாரத்திற்கும் தலைவணங்கவோ வளைந்து கொடுக்கவோமாட்டோம் என்பதை தமிழக மக்கள் காண்பிப்பார்கள். பா.ஜ.க மீதான அ.தி.மு.கவின் கூட்டணி அதை மாற்றாது. அண்ணாவின் பெயரைக் கொண்ட ஒரு கட்சி அவரின் கொள்கைக்கு எதிரானவர்களுடன் அவ்வாறு செய்வது என்பது துரதிர்ஷ்டவசமானது.

கேள்வி : தி.மு.க தேர்தல் அறிக்கையில் எப்போதும் எதிர்பார்ப்பினை உருவாக்கி வந்துள்ளது. இந்த முறை கல்வி கடன் தள்ளுபடி செய்வதாக உறுதியளித்துள்ளீர்கள். மேலும் என்ன வகையான ஆச்சரியங்களை எதிர்பார்க்கலாம்?

மு.க.ஸ்டாலின் : எங்கள் வாக்குறுதியில் மிக முக்கிய மூன்று விஷயங்கள் தமிழக மக்களின் உரிமைகளைப் பாதுகாத்தல், மக்களைக் கேட்பது, அவர்களுக்காக அங்கே இருப்பது எதுவாக இருந்தாலும், அரசாங்கத்தின் ஆதரவைப் பெறும்போது யாரும் பின்வாங்காமல் பார்த்துக் கொள்வது ஆகியவை அடங்கும். எங்கள் அறிக்கையானது மக்களின் அபிலாஷைகளையும் தேவைகளையும் பிரதிபலிக்கும்.

குறுகியகால பெரிய வாக்கெடுப்பிற்காக கொடுக்கும் வாக்குறுதிகளை விட, தமிழகத்திற்கு என்ன தேவை என்பது ஒரு முக்கியமான பார்வை. தமிழ்நாட்டிற்கான எனது பார்வை மார்ச் 7 ஆம் தேதி திருச்சியில் வெளியிடுவேன், இது தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாநிலத் துறையையும் நாட்டிலேயே சிறந்ததாக மாற்றுவதற்கான எங்கள் திட்டத்தை கோடிட்டுக் காட்டும்.

“பா.ஜ.க போன்ற எந்தவொரு அதிகாரத்திற்கும் தலைவணங்கவோ வளைந்துகொடுக்கவோ மாட்டோம்” : மு.க.ஸ்டாலின் பேட்டி!

கேள்வி : அதேபோல், இந்தத் தேர்தலின் போது எம்.ஜி.ஆர் பற்றி அதிகம் பேசப்படுகிறது. கமலஹாசனும், இ.பி.எஸ்.ஸும் எம்.ஜி.ஆரின் வாரிசு என்று கூறிக்கொள்கிறார்கள். நீங்களும் எம்.ஜி.ஆருடன் இருந்த நெருக்கத்தை நினைவு கூர்ந்துள்ளீர்கள். எம்.ஜி.ஆர் பற்றி திடுதிப்பென்று பேசப்படுவது ஏன்?

மு.க.ஸ்டாலின் : எம்.ஜி.ஆரைப் பொறுத்தவரை தமிழக முதலமைச்சர் என்பதைவிட எனக்கு அதிகம் தெரிந்தவர். அவர் தம்மை பெரியப்பா என்று நான் அழைப்பதையே விரும்பினார். நான் சிறுவனாக இருந்தபோதும், இளைஞனாக இருந்தபோதும் அவரோடு பலமுறை காலத்தை கழித்திருக்கிறேன். எனவே, அவரைப்பற்றியும் அவருடன் இருந்ததைப்பற்றியும் தெரிவிக்கிறேன். அது என் தனிப்பட்ட விஷயம்.

கடின உழைப்பு இல்லாமலும் வலுவான தலைவர்கள் இல்லாமலும் இருக்கும் கட்சிகள் தான் அடுத்தவர்களின் பலத்தை நம்பி இருக்கும். தி.மு.க.விற்கு அது தேவையில்லை. மக்கள் தலைவர்களைக் கொண்ட கட்சி எங்களது கட்சியாகும்.”

இவ்வாறு தி.மு.க தலைவர் பேட்டியளித்தார்.

banner

Related Stories

Related Stories