'நக்கட்', 'சர்க்கஸ்','சஞ்சீவானி' போன்ற தொலைக்காட்சி தொடர்களின் நடித்து மிகவும் பிரபலமானார் நடிகர் சமீர் காகர். பின்னர் 'ஹாசி தோ போஸி', 'ஜெய் ஹோ'', 'படேல் கி பஞ்சாபி' ஷாதி போன்ற பாலிவுட் படங்களிலும் நடித்துப் புகழ் பெற்றார்.
இதையடுத்து வயது முதிர்வின் காரணமாக சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். பழம் பெரும் நடிகரான சமீர் காகர் மும்பையில் தனது மனைவியுடன் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.
பின்னர் அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி நடிகர் சமீர் காகர் காலமானார். இதையடுத்து இவரது மறைவுக்குப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இது கறித்து அவரது சகோதரர் கணேஷ் காகர் கூறுகையில், "நேற்று அவருக்குச் சுவாசக் கோளாறு இருந்து. பின்னர் அவர் சுயநினைவற்ற நிலைக்குச் சென்றார். உடனே நாங்கள் மருத்துவரை வீட்டிற்கு அழைத்தோம்.
அவர் வந்து பரிசோதனை செய்துவிட்டு மருத்துவமனையில் சேர்க்கும்படி கூறினார். உடனே நாங்கள் அவரை எம்.எம் மருத்துவமனையில் சேர்த்தோம். அங்குச் சிகிச்சை பெற்று வந்த நிலையில் படிப்படியாக அவரது உறுப்புகள் செயலிழந்து வந்தது. பின்னர் இன்று அதிகாலை அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் கூறினர்" என தெரிவித்துள்ளார். நடிகர் நடிகர் சமீர் காகர் மறைவால் பாலிவுட் சினிமா கண்ணீரில் மூழ்கியுள்ளது.