உலகம்

நாடாளுமன்ற தேர்தலில் தோல்வி : கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் ரிஷி சுனக் !

பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியைத் தழுவியத்தைத் தொடர்ந்து கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் பதவியை ரிஷி சுனக் ராஜினாமா செய்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலில் தோல்வி : கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் ரிஷி சுனக் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

பிரிட்டனில் கடந்த 2010-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சி (Conservative) ஆட்சிக்கு வந்தது. அப்போது டேவிட் கேமரான் பிரதமரானார். இவரைத்தொடர்ந்து தெரசா மே, போரிஸ் ஜான்சன், லிஸ் ட்ரஸ், ரிஷி சுனக் ஆகியோர் கன்சர்வேடிவ் கட்சி சார்பில் தொடர்ந்து பிரதமராக பொறுப்பேற்றனர்.

இவ்வாறு 2010 முதல் தொடர்ந்து கன்சர்வேடிவ் கட்சி ஆட்சியில் இருந்து வந்த நிலையில், தற்போது நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அக்கட்சி தோல்வியை சந்தித்துள்ளது. பிரிட்டனில் நேற்று (ஜூலை 4) பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்த தேர்தலில் அந்நாட்டின் முக்கிய கட்சிகளான ரிஷி சுனக்கின் கன்சர்வேடிவ் கட்சிக்கும், கெய்ர் ஸ்டார்மரின் தொழிலாளர் கட்சிக்கும் (Labour) இடையே கடும் போட்டி நிலவியது. தேர்தலுக்கு முந்தைய மற்றும் பிந்தைய கருத்துக்கணிப்புகளில் கெய்ரின் தொழிலாளர் கட்சியே வெற்றி பெரும் என்று தெரிவிக்கப்பட்டது.

நாடாளுமன்ற தேர்தலில் தோல்வி : கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் ரிஷி சுனக் !

அதனை உறுதி செய்யும் வகையில் தற்போது 650 தொகுதிகளில் 410 தொகுதிகளை கெய்ர் ஸ்டார்மர் தலைமையிலான தொழிலாளர் கட்சி பிடித்து ஆட்சியை கைப்பற்றியுள்ளது. மேலும் இந்த முறை ரிஷி சுனக் தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சி வரலாறு காணாத அளவு தோல்வியை சந்தித்துள்ளார். 650-களில் ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சி வெறும் 119 இடங்களிலேயே வெற்றி பெற்றுள்ளது.

மொத்தமுள்ள 650 இடங்களில் ஆட்சியமைக்க பெரும்பான்மைக்கு தேவை 326 தேவை படும் நிலையில், தற்போது வரை தொழிலாளர் கட்சி 400 இடங்களுக்கு மேல் கைப்பற்றியுள்ளது. இதனால் பிரிட்டனின் புதிய பிரதமராக அக்கட்சி தலைவர் கெய்ர் ஸ்டார்மர் (Keir Starmer) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் பதவியை ரிஷி சுனக் ராஜினாமா செய்துள்ளார். இதன் மூலம் பிரதமர் பதவியிலிருந்தும் அவர் விலகியுள்ளார். தனது கட்சியின் தோல்வி குறித்து கருத்து தெரிவித்த ரிஷி சுன்னத் " எனது தோல்வியை ஒப்புக்கொள்கிறேன். சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரின் நல்லெண்ணத்துடன் அதிகாரம் சுமூகமாகவும் அமைதியாகவும் மாறும். இந்த இழப்புக்கான முழுப் பொறுப்பையும் நான் ஏற்றுக்கொள்கிறேன். பிரிட்டன் மக்களால் தெரிவிக்கப்பட்ட குறிப்பிடத்தக்க செய்தியைப் புரிந்துகொள்கிறேன். இந்த தோல்வியை உள்வாங்குவதற்கும், சிந்திக்கவும் நிறைய இருக்கிறது" எனக் கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories