உலகம்

154 முறை கைது - 31 ஆண்டுகள் சிறை : அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு - யார் இந்த நர்கேஸ் முகமதி?

அமைதிக்கான நோபல் பரிசு ஈரான் நாட்டைச் சேர்ந்த நர்கேஸ் முகமதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

154 முறை கைது - 31 ஆண்டுகள் சிறை : அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு  - யார் இந்த  நர்கேஸ் முகமதி?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

1901ம் ஆம் ஆண்டிலிருந்து ஆல்பிரட் நோபல் எனும் வேதியியல் பொறியாளர் பெயரில் ஆண்டு தோறும் மருத்துவம், வேதியியல், இலக்கியம், உலக அமைதி, இயற்பியல் ஆகிய 5 துறைகளில் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு வருகிறது. இவ்விருது உலகின் மிகவும் புகழ்பெற்ற விருதாகும்.

இந்த ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு பியரி பியரி அகோஸ்தினி, ஃபெரெங்க் க்ரவுஸ் மற்றும் அன்னி எல் ஹூலியர் ஆகிய மூன்று விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் வேதியியலுக்கான நோபல் பரிசு மவுங்கி பவெண்டி, லூயிஸ் புரூஸ், அலெக்சி எகிமோவ் ஆகியாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இலக்கியத்துக்கான நோபல் பரிசு நார்வே எழுத்தாளரான ஜான் ஃபோஸ்ஸேக்கு (Jon Fosse) அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அமைதிக்கான நோபல் பரிசு சமூக செயல்பாட்டாளர் நர்கேஸ் முகமதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

யார் இந்த நர்கேஸ் முகமதி?

ஈரான் நாட்டில் பெண்களுக்கு எதிரான நடந்து வரும் ஒடுக்கு முறைகளைப் பார்த்துப் பார்த்து வளர்ந்த நர்கேஸ் முகமதி 1990ம் ஆண்டு இயற்பியல் மாணவியாக இருந்தபோது பெண்களின் உரிமைக்காக முதல் முதலில் குரல் கொடுக்கத் தொடங்கினார்.

இப்படியான போராட்டங்கள் அவரை சிறையில் அடைத்தது. இருந்தும் அவரது மனம் துவண்டுவிடவில்லை. சிறையிலிருந்து வெளியே வந்ததும் மீண்டும் பெண்களை ஒடுக்கும் ஈரானிய ஆட்சிக்கு எதிராகத் தனது போராட்டத்தை இன்னும் இன்னும் வலுப்படுத்தினார்.

2003ம் ஆண்டு அமைதிக்கான நேபால் பரிசு பெற்ற ஷிரின் எபாடி தலைமையில் செயல்பட்டு வந்த மனித உரிமைகள் பாதுகாப்பு மையத்தின் துணைத் தலைவராகப் பொறுப்பேற்றார். அதன் பிறகு இன்னும் இவர் வேகமாகச் செயல்படத் துவங்கினார்.

154 முறை கைது - 31 ஆண்டுகள் சிறை : அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு  - யார் இந்த  நர்கேஸ் முகமதி?

ஈரானில் எங்கு எந்தப்பெண் பாதிக்கப்பட்டாலும் அங்குக் கேட்கும் முதல் குரல் இவருடையதாகத்தான் இருக்கும். இதனால் தான் ஈரான் அரசால் 154 முறை கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் தனது வாழ்க்கையில் பாதி 31 ஆண்டுகள் சிறையிலிருந்துள்ளார்.

2022ம் ஆண்டு ஹிஜாப் முறையாக அணியாததால் இளம் பெண் கைது செய்யப்பட்டார். பின்னர் இவர் சிறையில் உயிரிழந்தார். இந்த கொடூரத்தைக் கண்டித்து ஈரானையே உலுக்கும் அளவிற்கு வலுவான போராட்டத்தைக் கையில் எடுத்தார் நர்கேஸ் முகமதி. தற்போதும் இவர் சிறையில்தான் உள்ளார். இந்நிலையில்தான் அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories