உலகம்

இந்தியாவின் பாதுகாப்பு ஏற்பாடுகளை புறக்கணித்த கனடா பிரதமர்.. சாதாரண அறையில் தங்கியதற்கு காரணம் என்ன ?

இந்தியா செய்துகொடுத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ புறக்கணித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் பாதுகாப்பு ஏற்பாடுகளை புறக்கணித்த கனடா பிரதமர்.. சாதாரண அறையில் தங்கியதற்கு காரணம் என்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

ஆண்டுதோரும் ஜி-20 கூட்டமைப்பின் தலைமை பொறுப்பு கூட்டமைப்பில் உள்ள நாடுகளுக்கு சுழற்சி முறையில் வழங்கப்படும். அந்த வகையில் இந்த முறை இந்த ஜி-20 கூட்டமைப்பின் தலைமை பொறுப்பு இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனால் இந்த ஆண்டுக்கான ஜி-20 கூட்டமைப்பு மாநாடு இந்தியாவின் தலைநகர் டெல்லியில் கடந்த செப்டம்பர் 9 மற்றும் 10-ம் தேதியில் நடைபெற்றது.

இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், சௌதி அரேபியா இளவரசர் முகமது பின் சல்மான் கனடா அதிபர் ஜஸ்டின் ட்ரூடோ உள்ளிட்ட முக்கிய உலகத் தலைவர்கள் கலந்துகொண்டனர். இந்த மாநாட்டில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பாதுகாப்பு ஏற்பாடுகளை புறக்கணித்தது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளார்.

மாநாட்டுக்கு வந்த முக்கிய தலைவர்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகம் கொண்ட ஹோட்டல்களில் அறைகள் ஒதுக்கப்பட்டிருந்தன. அந்த வகையில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் அவருடன் வந்த அதிகாரிகளுக்கு மத்திய டெல்லியில் உள்ள லலித் என்ற நட்சத்திர ஹோட்டலில் ஸ்னைப்பர் தோட்டாக்கள் துளைக்க முடியாத தடிமனான பாலிகார்பனேட் கண்ணாடி கொண்டு அமைக்கப்பட்ட அறைகள் ஒதுக்கப்பட்டிருந்தன.

இந்தியாவின் பாதுகாப்பு ஏற்பாடுகளை புறக்கணித்த கனடா பிரதமர்.. சாதாரண அறையில் தங்கியதற்கு காரணம் என்ன ?

ஆனால், கனடா பாதுகாப்பு அதிகாரிகள் அங்கு தங்கவேண்டும் என முடிவுசெய்து அந்த ஹோட்டலில் இருந்த சாதாரண அறைகளில் பிரதமர் மற்றும் அதிகாரிகள் தங்குவார்கள் என இந்திய பாதுகாப்பு அதிகாரிகளிடம் கூறியுள்ளனர். விருந்தினர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டிய பொறுப்பு இந்தியாவுக்கு உள்ளதால் பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றுமாறு பலமுறை இந்திய அதிகாரிகள் சார்பில் கனடா பாதுகாப்பு அதிகாரிகளிடம் கூறியும் அவர்கள் அதை ஏற்றுக்கொள்ளாமல் இருந்துள்ளனர்.

இதன் காரணமாக கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் அதிகாரிகள் அந்த ஹோட்டலில் இருந்த சாதாரண அறைகளில் தங்கியிருந்துள்ளனர். இதன் பின்னர் மாநாடு முடிந்ததும், கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நாடு திரும்பவிருந்த சிறப்பு விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக 36 மணி நேரம் தாமதமாக ஜஸ்டின் ட்ரூடோ கனடா திரும்பச்சென்றார்.

இதனிடையே , கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நாடு திரும்ப இந்தியா தனி விமானத்தை வழங்குவதாக கனட பாதுகாப்பு அதிகாரிகளிடம் தெரிவித்தது. ஆனால், இதையும் கனடா அதிகாரிகள் நிராகரித்துள்ளனர். கனடாவில் சீக்கிய தலைவர் கொல்லப்பட்ட விவகாரத்தில் இரு நாடுகளுக்கும் இடையேயும் பதற்றம் நிலவிய காரணத்தால் கனடா அரசு இப்படி நடந்துகொண்டிருக்கலாம் என கருதப்படுகிறது.

banner

Related Stories

Related Stories