உலகம்

விதியை மீறிய இலங்கிலாந்து பிரதமர்.. ரூ.50 ஆயிரம் அபராதம் செலுத்த வைத்த கால்துறையின் துணிவான நடவடிக்கை!

காரில் சீட் பெல்ட் அணியாமல் சென்றதால் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கிற்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

விதியை மீறிய இலங்கிலாந்து பிரதமர்..  ரூ.50 ஆயிரம் அபராதம் செலுத்த வைத்த கால்துறையின் துணிவான நடவடிக்கை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இங்கிலாந்தின் பழமைவாத ( கன்சர்வேடிவ் ) கட்சியைச் சேர்ந்த போரிஸ் ஜான்சன் 2019ம் ஆண்டில் ஆட்சிக்கு வந்ததிலிருந்தே உலகளவில் பல விமர்சனங்களுக்கு உள்ளானார். அவரது அமைச்சரவை சகாக்களே அவர் மீது கடும் விமர்சனத்தை வைத்தனர். இதன் காரணமாக அவர் பதவி விலகினார். இதையடுத்து நடந்த பிரதமர் தேர்தலில் லிஸ் ட்ரஸ் வெற்றி பெற்று பிரதமராகப் பதவியேற்றார். ஆனால் பதவியேற்ற 45 நாட்களிலேயே தனது பதவியை ராஜினாமா செய்தார்.

விதியை மீறிய இலங்கிலாந்து பிரதமர்..  ரூ.50 ஆயிரம் அபராதம் செலுத்த வைத்த கால்துறையின் துணிவான நடவடிக்கை!

பின்னர், இங்கிலாந்தின் புதிய பிரதமராகக் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ரிஷி சுனக் பதவியேற்றார். இவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். ஏற்கனவே இவர் நிதித்துறை அமைச்சராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் இலங்கிலாந்து பிரதமராக பதவியேற்றது முதல் தனது பணிகளில் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் சீட் பெல்ட் அணியாமல் காரில் பயணம் செய்த சர்ச்சையில் சிக்கி, அபராதம் செலுத்தியுள்ளார்.

இங்கிலாந்து நாட்டில் காரில் பயணம் செய்பவர்கள் கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும் என்ற விதி அமலில் உள்ளது. இந்நிலையில்தான் இலங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் காரில் சீட் பெல்ட் அணியாமல் பேசும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது.

விதியை மீறிய இலங்கிலாந்து பிரதமர்..  ரூ.50 ஆயிரம் அபராதம் செலுத்த வைத்த கால்துறையின் துணிவான நடவடிக்கை!

இதையடுத்து பிரதமரின் இத்தகைய அலட்சிய நடவடிக்கைக்குப் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் விதியை மீறி பிரதமருக்கு இலங்கிலாந்து காவல்துறை அபராதம் விதித்தது. பிறகு, "காரில் சீட் பெல்ட் அணியாமல் சென்றது தவறான செயல். அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும், ரூ.50 ஆயிரம் அபராதம் செலுத்தப்பட்டுள்ளதாகவும்" ரிஷி சுனக் சார்பில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் மிக உயரிய பதவியில் அமர்ந்திருக்கும் பெரிய ஆளுமைக்கு அபராதம் விதித்த பிரிட்டன் காவல்துறை நடவடிக்கைக்கு அனைவரையும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories