போக்குவரத்துக்கு ஏதுவாக உள்ளது விமானம். விமானத்தில் பயணம் செய்யும் பயணிகளுக்கு அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப உணவுகள் வழங்கப்படும். அப்படி கொடுக்கப்படும் உணவுகளில் சில அதிர்ச்சி சம்பவங்களும் நிகழும். அப்படி ஒருவ நிகழ்வு தான் தற்போது அரங்கேறியுள்ளது.
அதாவது, BA107 - பிரிட்டிஷ் விமானத்தில் காடா என்ற பெண் ஒருவர், அக்டோபர் 25 ஆம் தேதி பயன் மேற்கொண்டார். லண்டனிலிருந்து துபாய்க்கு பயணித்த அவருக்கு விமானத்தில் அன்று உணவு வழங்கப்பட்டுள்ளது. அப்போது அதனை உண்டு கொண்டிருக்கும்போது திடீரென்று அவரது வாயில் கல் போன்று எதோ சிக்கியுள்ளது. அதை அவரது வாயில் இருந்து எடுத்து பார்த்தபோது மனிதரின் பல் இருந்தது தெரியவந்தது.
தொடர்ந்து அவரது பல் விழுந்துவிட்டதோ என்று சந்தேகமடைந்த பெண், பின்னர் அது தனது பல் இல்லை என்பதை உணர்ந்தார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து விமான ஊழியர்களிடம் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார். அவர்கள் இது குறித்த விளக்கத்தை தற்போது வரை அளிக்கவில்லை.
எனவே கோபமடைந்த அந்த பெண் கடந்த 4-ம் தேதி இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் கூடிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், "அக்டோபர் 25 அன்று லண்டனில் இருந்து துபாய்க்கு BA107 விமானத்தில் பயணித்த போது எங்கள் உணவில் கிடைத்த இந்த பல் உள்வைப்பு பற்றி உங்களிடமிருந்து கேட்க இன்னும் காத்திருக்கிறோம் (எங்கள் அனைத்து பற்களும் உள்ளன: இது எங்களுடையது அல்ல). இது பயங்கரமானது. உங்கள் கால் சென்டரில் இருந்து யாரையும் என்னால் தொடர்பு கொள்ள முடியவில்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இந்த பதிவில் பிரிட்டிஷ் ஏர்வேஸின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தையும் டேக் செய்துள்ளார். இவரது இந்த பதிவு தற்போது பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர். இதைத்தொடர்ந்து கவனித்த பிரிட்டிஷ் ஏர்வேஸ், இவரது பதிவிற்கு ரிப்ளை செய்துள்ளது.
அதில், "ஹாய் இருக்கிறீர்களா? இதைப் பார்த்து நாங்கள் மிகவும் வருந்துகிறோம்! எங்கள் வாடிக்கையாளர் சேவைக்குழு உங்களை தொடர்புக்கொள்ள கேபின் குழுவினரிடம் உங்களுடைய விவரங்களை கொடுத்தீர்களா? பாதுகாப்பு கருதி, உங்களுடைய விவரங்கள தனிப்பட்ட முறையில் குறுஞ்செய்தி அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்" என்று குறிப்பிட்டுள்ளது.