பிரபல இந்திய எழுத்தாளர் சல்மான் ருஷ்ட்டி. இவர் பிரிட்டிஷ் - அமெரிக்காவில் நாவல்கள் எழுதி மிகவும் பிரபலமானார். இந்த நிலையில் கடந்த வாரம் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இவர் பங்கேற்றார். அங்கே சுமார் 24 வயதுடைய ஹதி மாதர் என்ற இளைஞர் இவரை கத்தியால் சரமாரியாக குத்தினார். மேலும் அவரது கழுத்து வயிற்றை குறிபார்த்தே மீண்டும் மீண்டும் குத்தினார்.
இதில் சம்பவ இடத்திலேயே சுருண்டு வீழ்ந்த ருஷ்ட்டியை அங்கிருந்த காவலர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதோடு தாக்கிய இளைஞரையும் கைது செய்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது ருஷ்ட்டி தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். அதோடு அவருக்கு ஒரு கண்பார்வை பறிபோனது.
தொடர்ந்து தாக்குதல் நடத்திய இளைஞரிடம் மேற்கொண்ட விசாரணையில் ருஷ்ட்டியை எதற்காக தாக்கினேன் என்று விளக்கம் கொடுத்துள்ளார். அவர் கூறியதாவது, "ருஷ்ட்டியை எனக்கு பிடிக்கவில்லை. அவரது எழுத்துக்களும் எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. நான் ஈரானின் ஆயாதொல்லா (Ayatollah)-வை வழி படுபவன்.
ருஷ்ட்டி எழுதிய 'சாத்தானின் வேதங்கள்' புத்தகத்தை நான் இரண்டு பக்கங்கள் கூட படிக்கவில்லை. இவர் இஸ்லாமிய மத நம்பிக்கையை சிதைக்கிறார். அவர் நல்லவர் இல்லை; மோசமானவர். நான் அத்தனை முறை குத்தியும் அவர் எப்படி பிழைத்தார் என்பது ஆச்சர்யமாக உள்ளது" என்று தெரிவித்தார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
'சாத்தானின் வேதங்கள்' கடந்த 1988 ஆம் வெளியானது. இந்த புத்தகம் வெளியானதிலிருந்தே பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது 34 வருடங்களுக்கு பிறகும் சர்ச்சையை கிளப்பி வருகிறது. இந்த புத்தகம் இந்திய அரசு தடை விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.