ஒவ்வொரு இஸ்லாமியர்களும் ஒருமுறையாவது ஹஜ் யாத்திரை புனித பயணம் செய்ய வேண்டும் என தங்களின் வாழ்நாள் குறிக்கோளாகக் கொண்டு இருப்பர்.
உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் ஒவ்வொரு ஆண்டும் மக்காவிற்கு புனித யாத்திரை வந்து செல்வது வழக்கம். பக்ரீத் பண்டிகையை ஒட்டி ஹஜ் யாத்திரை பயணம் இருக்கும்.
கடந்த 2 ஆண்டுகள் கொரோனா காரணமாக புனித யாத்திரை நடைபெறாமல் இருந்தது. இதையடுத்து கொரோனா தொற்று குறைந்ததை அடுத்து இந்த ஆண்டு இஸ்லாமியர்கள் புனித யாத்திரை செல்ல திட்டமிட்டு வருகின்றனர்.
மேலும் மக்காவில் பிறை உதிக்கும் நாளில் அரபி மொழியில் உரை ஆற்றப்படும். இந்த உரையை இந்த உரையை அரஃபா என கூறப்படுகிறது. மேலும் ஆங்கிலம், பிரெஞ்சு, மலாய், உருது, பார்சி, ரஷ்யன் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு அரஃபா வெளியிடப்படும்.
இந்நிலையில் இந்த அரஃபா உரையைத் தமிழ், இந்தி, ஸ்பானிஷ், சுவாஹிலி ஆகிய 4 மொழிகளிலும் வெளியிட சவூதி அரசு முடிவு செய்துள்ளது. இந்த முடிவால் தமிழ்நாட்டு இஸ்லாமியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.