சிலியின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றான கன்சோர்சியோ இண்டஸ்ட்ரியல் நிறுவனத்தின் ஊழியர் ஒருவருக்கு கவனக்குறைவாக இந்திய மதிப்பில் ரூ.45 ஆயிரம்-க்கு பதிலாக இந்திய மதிப்பில் ரூ.1.42 கோடி ஊதியமாக அளிக்கப்பட்டுள்ளது.
இந்த தவறு அந்த நிறுவனத்தின் கணக்கை சரி பார்த்தபோது தெரியவந்துள்ளது. உடனடியாக அந்த நிறுவனம் சார்பில் அந்த ஊழியரை தொடர்பு கொண்டு அதிகமாக அளித்த தொகையை திரும்ப கொடுக்குமாறு கூறப்பட்டுள்ளது.
இதனை ஏற்ற அந்த நபரும் தொகையை திரும்ப ஒப்படைப்பதாக கூறியுள்ளார். ஆனால் கூறியபடி பணம் திரும்ப ஒப்படைக்கப்படாததால் அவரை மீண்டும் தொடர்பு கொண்டுள்ளனர். ஆனால் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை.
இதன் பின்னரே அவர் வேலையே ராஜினாமா செய்து தலைமறைவாகியது நிறுவனத்துக்கு தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த நிறுவன ஊழியர்கள் இப்போது பணத்தை திரும்பப்பெற சட்ட அமைப்பை தொடர்பு கொண்டுள்ளனர். இந்த தகவல் சிலியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.