உலகம்

தனக்குத் தானே பிரசவம்.. கடல் அலை நடுவே குழந்தை பெற்றெடுத்த இளம்பெண்: வைரல் வீடியோவின் பின்னணி என்ன?

கடல் அலைகளுக்கிடையே பெண் ஒருவர் குழந்தையைப் பெற்றெடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தனக்குத் தானே பிரசவம்.. கடல் அலை நடுவே குழந்தை பெற்றெடுத்த இளம்பெண்: வைரல் வீடியோவின் பின்னணி என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மத்திய அமெரிக்காவில் உள்ள நிக்கராகுவா நாட்டைச் சேர்ந்தவர் ஜோஷி பியூகெர்ட் (37) என்ற பெண். ஜெர்மனியிலிருந்து குடியேறிய இவருக்கு, ஏற்கனவே இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், மூன்றாவதாக கருவுற்றிருந்தார். கர்ப்ப கால ஸ்கேன் செய்வதை முழுமையாக நிராகரித்த இவர், "இலவசப் பிரசவம்" என்று அழைக்கப்படும் முறையில் மருத்துவ உதவியின்றி தனது குழந்தையைப் பெற்றெடுக்க முடிவு செய்தார் .

அப்போது திடீரன்று, தனது குழந்தையை கடலில் யாருடைய உதவியும் இன்றி தனியாகப் பெற்றுக்கொள்ள விரும்பியுள்ளார். இதற்காக பல வாரங்களாக அங்குள்ள பசுபிக் கடல் அலைகளை தொடர்ந்து கண்காணித்து வந்துள்ள அவர், இது குழந்தை பெற்றுக்கொள்ள பாதுகாப்பாக இருக்கும் என்று உறுதிப்படுத்திக்கொண்டார்.

இந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி, தனக்கு பிரசவ வலி வரப்போவதை உணர்ந்த ஜோஷி, தனது இரண்டு குழந்தைகளையும் நண்பர்களுடன் தங்க வைத்துவிட்டு, தன் கணவருடன் பிரசவத்துக்குத் தேவையான பொருட்களான துண்டு, தொப்புள் கொடியை எடுக்கும் சல்லடை என்று அடிப்படை பொருட்களுடன் கடற்கரைக்குச் சென்று அலைகளுக்கு நடுவே, ஒரு அழகான ஆண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார்.

கடல் அலைகளுக்கு இடையில் பிறந்த அந்த குழந்தை தற்போது ஆரோக்கியமான எடையுடன் இருக்கிறது. மேலும் ஜோஷியும் அவரது கணவரும் குழந்தைக்கு,போதி அமோர் ஓஷன் கார்னீலியஸ் எனப் பெயரிட்டுள்ளனர்.

தனது குழந்தை கடல் அலைகளுக்கு இடையில் எவ்வாறு பிறந்தது என்பது தொடர்பான வீடியோவை தற்போது தனது சமூக வலைதளபக்கத்தில் வெளியிட்டு, “ஒவ்வொரு பெண்ணையும் அவரது கணவர் முழுமையாக நம்ப வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

கடல் அலைகளுக்கிடையில் ஜோஷி குழந்தையைப் பெற்றெடுக்கும் 50 நொடி வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஜோஷியின் இயற்கையான பிரசவ முறைக்கு பல்வேறு பாராட்டுகள் குவிந்தாலும், அதிலிருக்கும் அபாயம் குறித்தும் இணையவாசிகள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories