உலகம்

சூப்பர் மார்க்கெட்டில் துப்பாக்கிச் சூடு.. 10 பேர் பலி: அமெரிக்காவில் தொடரும் துப்பாக்கி கலாச்சாரம்!

பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் இலங்கையில் உரத்துக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுகிறது.

சூப்பர் மார்க்கெட்டில் துப்பாக்கிச் சூடு.. 10 பேர் பலி: அமெரிக்காவில் தொடரும் துப்பாக்கி கலாச்சாரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

1.பின்லாந்து நாட்டுக்கான மின்சார விநியோகத்தை நிறுத்தும் ரஷ்யா!

பின்லாந்து நாட்டுக்கான மின்சார சப்ளையை ரஷியா நிறுத்துவதாக அறிவித்துள்ளது. பின்லாந்தும், ரஷ்யாவும் ஆயிரத்து 300 கிலோ மீட்டர் எல்லையை பகிர்ந்து கொள்கின்றன. இந்நிலையில், நோட்டோ அமைப்பில் சேர பின்லாந்து முடிவு செய்து அதற்கான பணிகளை முடுக்கி விட்டுள்ளது. இதற்கு ரஷியா எதிர்ப்பு தெரிவித்து வரும் சூழலில், பின்லாந்துக்கு மின்சார சப்ளையை நிறுத்த ரஷியா முடிவெடுத்துள்ளது. உக்ரைன் மீதான ரஷியாவின் படையெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மின் கட்டனங்களை செலுத்த முடியாது என பின்லாந்து அறிவித்துள்ளதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.அதே நேரத்தில், ரஷியாவிடம் இருந்து 10 விழுக்காடு மட்டுமே மின்சாரம் வாங்குவதால் எந்த பாதிப்பும் இல்லை என பின்லாந்து தெரிவித்துள்ளது.

சூப்பர் மார்க்கெட்டில் துப்பாக்கிச் சூடு.. 10 பேர் பலி: அமெரிக்காவில் தொடரும் துப்பாக்கி கலாச்சாரம்!

2. UAE செல்லும் இங்கிலாந்து பிரதமர்!

ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைவர் ஷேக் கலிஃபா பின் ஷயத் அல் நயான், உடல் நலக்குறைவால் காலமானார்.இந்த நிலையில், அதிபரின் மறைவுக்கு பின் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பயணம் செய்யவுள்ளார் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன். இங்கிலாந்து பிரதமரின் இந்த வருகையானது இரு நாடுகளுக்கும் இடையிலான பிணைப்பை மேலும் வலுப்படுத்தும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3. இலங்கையில் உரத்துக்கு கடும் தட்டுப்பாடு!

பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் இலங்கையில் உரத்துக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் மே முதல் ஆகஸ்டு வரையிலான யாலா சாகுபடிக்கு யூரியா கிடைக்கவில்லை.எனவே இந்தியாவிடம் இலங்கை உதவி கோரியது. இது தொடர்பாக ஒன்றிய உரத்துறை செயலாளர் ராஜேஷ் குமார் சதுர்வேதியுடன், இந்தியாவுக்கான இலங்கை தூதர் மிலிந்தா மரகோடா சமீபத்தில் பேச்சுவார்த்தை நடத்தினார்.இதைத்தொடர்ந்து இலங்கைக்கு 65 ஆயிரம் டன் யூரியா அனுப்ப இந்தியா முன்வந்துள்ளது. இந்தியாவில் யூரியா ஏற்றுமதிக்கு தடை இருந்தபோதிலும் இலங்கைக்கு இந்த உதவியை ஒன்றிய அரசு செய்கிறது.

சூப்பர் மார்க்கெட்டில் துப்பாக்கிச் சூடு.. 10 பேர் பலி: அமெரிக்காவில் தொடரும் துப்பாக்கி கலாச்சாரம்!

4. ‘ஜி 7’ நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் கூட்டம்!

உக்ரைன் போர் தொடர்பாக விவாதிப்பதற்காக ‘ஜி 7’ நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் கூட்டம் ஜெர்மனியில் நடைபெற்றது. அப்போது உக்ரைனில் நடக்கும் போர், ஏழை நாடுகளை அச்சுறுத்தும் உலகளாவிய உணவு மற்றும் எரிசக்தி நெருக்கடிக்கு வழிவகுக்கும் என்று ‘ஜி 7’ நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் எச்சரித்தனர்.இந்த கூட்டத்துக்கு தலைமை தாங்கிய ஜெர்மனி வெளியுறவு மந்திரி அன்னலெனா பேர்பாக் “உக்ரைனியர்களிடம் உள்ள தானியங்களை வெளியிடுவதற்கான வழிகள் கண்டுபிடிக்கப்படாவிட்டால் வரும் மாதங்களில் சுமார் 5 கோடி மக்கள், குறிப்பாக ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளை சேர்ந்தவர்கள் பட்டினியை எதிர்கொள்ள நேரிடும் என்பதால், போர் உலகளாவிய நெருக்கடியாக மாறியுள்ளது” என்றார்.எனவே தானியங்களை உக்ரைனை விட்டு வெளியேற்றுவதற்கான தடைகளை அகற்றுவதற்கு ரஷியாவுக்கு கடுமையான முறையில் அழுத்தம் கொடுக்க வேண்டுமென சர்வதேச சமூகத்தை ‘ஜி 7’ நாடுகள் வலியுறுத்தி உள்ளன.

5. அமெரிக்காவில் நடந்த துப்பாகி சூட்டில் 10 பேர் பலி!

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் உள்ள பஃபேலோ நகரில் செயல்பட்டு வரும் ப்ரெண்ட்லி சூப்பர் மார்க்கெட் கட்டிடத்திற்குள் நுழைந்த மர்மநபர் அங்கிருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. உடனடியாக அந்த நபரை சுற்றி வளைத்த போலிசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories